| பணையெருத்தி னிணையரிமா னணையேந்தத் துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி எயினடுவ ணினிதிருந் தெல்லோர்க்கும் பயில்படுவினைப் பத்திமையாற் செப்பினோன் புனையெனத் திருவுறு திருந்தடி திசைதொழ விரிவுறு நாற்கதி வீடுநனி யெளிதே.' |
இச்சிந்தடி வஞ்சிப்பா, புணையென' என்னும் தனிச்சொற் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் இற்றதெனக் கொள்க. |
| ['தொன்னலத்தின்.............சேணிவந்தற்றே' |
(கா. 23. மேற்.) |
என்னும் சிந்தடி வஞ்சிப்பா' எனப் பெரிதும்' என்னும் தனிச் சொற் பெற்று ஆசிரியச் சுரிதகத்தா லிற்றது.] |
'அமுதே,' 'வஞ்சிக்கொடியே' என்பன மகடூஉ முன்னிலை, |
| [' (2) மடப்பிடி பேடை யிரும்பிடி தாழிசை வாய்ந்ததுறை 5 வடுப்புரை 6கண்மட வாய்மை சிறந்த திரைத்தவுமாம் மடற்றிகழ் சோலை யிருதுவு மாகும் விருத்தம் வஞ்சிக் 7 கொடித்திகழ் பூந்தா மரைகொடி வாலன தொன்னலமே.' |
இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே வஞ்சிப்பாவுக்கும் இனங்கட்கும் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக்கொள்க.] |
(14) |
|
பிடரியை யுடைய. அரிமான் - சிங்கம். நாற்கதி : காரிகை 9. அடிக். 5. (2) அச்சுப் பிரதிகளில் இந்த உதாரண முதனினைப்புப் பின்வருமாறு உள்ளது : |
| 'மடப்பிடி பேடை யிரும்பிடி வஞ்சியின் றாழிசையாம் வடுப்புரை கண்ணினல் லாய்மை சிறந்தன வான்றுறையாம் தடப்பெருஞ் சோலை விருத்தம தாகுந் தயங்குவஞ்சிக் கொடித்தொடி பூந்தா மரைகொடி வால னுதாரணமே.' |
|
(பி - ம்.) 5. தொடைக்குரி மைசிறந் தாங்குந் திரைத்தவஞ் சித்துறையாம், சுடர்த்தொடி சோலை யிருது விருத்தம்பூந் தாமரையும், அடுத்த கொடிவா லனதொன்னலம்வஞ்சி யாகுமின்னே, 6. கண்ணாய் திரைத்தவென் றாகுமொண் மைசிறந்த 7. தடத்திய பூந்தா மரைகொடி வாலன தானறியே. |