132

யாப்பருங்கலக் காரிகை

 

மருட்பா

35. பண்பார் புறநிலை பாங்குடைக் கைக்கிளை வாயுறைவாழ்த்
தொண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை யூனமில்லா
வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால்
வண்பான் மொழிமட வாய்மருட் பாவென்னும் வையகமே.
 
     இ....கை. புறநிலை வாழ்த்து மருட்பாவும், கைக்கிளை மருட்பாவும், வாயுறை
வாழ்த்து மருட்பாவும், செவியறிவுறூஉ மருட் பாவும் ஆமாறு உணர்த்....று.
 
     இதன் பொழிப்பு : புறநிலை வாழ்த்தும், கைக்கிளையும், வாயுறை வாழ்த்தும்,
செவியறிவுறூஉம் என்னும் நான்கு பொருண்மேலும் வெண்பா முதலாக ஆசிரியம் 
ஈறாக வருமெனின் அதனை மருட்பா வென்று வழங்குவர் புலவர்  எ -று.
 
  'வண்பால் மொழி மடவாய்' எ - து. மகடூஉ முன்னிலை.
வெள்ளை முதலா வாசிரிய மிறுதி
கொள்ளத் தொடுப்பது மருட்பா வாகும்'

[கலிநிலை வகையும் வஞ்சி யும்பெறா]
 
1என்றார் காக்கைபாடினியார்.
 

வரலாறு

(புறநிலை வாழ்த்து மருட்பா)

(2) தென்ற லிடைபோழ்ந்து தேனார் நறுமுல்லை
முன்றின் முகைவிரியு முத்தநீர்த் தண்கோளூர்க்
குன்றமர்ந்த கொல்லேற்றா 2னிற்காப்ப வென்றுந்
தீரா நண்பிற் றேவர்
சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே:'
 
     இது 'வழிபடு தெய்வம் நிற் புறங்காப்பப் பழிதீர் செல்வ
 

     (1) இவ்வடி தொல். பொருள், சூ. 422 இன் ஈற்றடியாகவும் காணப்படுகிறது.

      (2) கொல் லேற்றான் - சிவன். இப்பாட்டின் ஈற்றிலுள்ள இரண்டும்
ஆசிரியவடிகள். தெய்வத்தைப் புறம் நிறுத்தி வாழ்த்தலின் இது புறநிலை
வாழ்த்தாயிற்று.
 

     (பி - ம்.) 1. என்றார் ஆகலின்.