செய்யுளியல் - முதனினைப்பு

137

 

செய்யுளியல் முதனினைப்புக் காரிகை (1)

வெண்பா வளம்பட வீரடி யொன்றுட னேரிசையே
கண்பானல் போன்மயி லந்தமின் மூன்றுங் கடைதருக்கி
நண்பார் தரவொன் றசைதர வேயடி யோடுகுறள்
பண்பார் புறநிலை செய்யு 1ளியலென்ப பாவலரே.
 

      1.செய்யுளியல் முதனினைப்புக் காரிகை பிரதிதோறும் கீழ் வருமாறு
வேறுபட்டுள்ளது :
 

கலித்துறை

வெண்பா வளம்பட வீரடி யொன்றுட னேரிசைமேல்
2நண்பாகு மந்தமின் மூன்றடி நண்ணுங் கடையயலும்
தண்பா றருக்கிய 3லேதர வொன்றசை யேதரவே
திண்பா வடிகுறள் பண்பார்மூ வைந்து செயுளியலே.
 

அடிவரவாசிரியம்

  வெண்பா வகவல் வளம்பட வீரடி
ஒன்றும் பலவும் நேரிசை யந்தமில்
மூன்றடி யானுங் கடையயற் பாதத்
தருக்கிய றாழிசை தரவொன்று தாழிசை
அசையடி முன்னர் தரவே
அடிவரை குறளடி பண்பார் புறநிலையே.

வெண்பா வளம்பட வீரடி யுருவுகண்
டொன்றும் வைக னேரிசை நற்கொற்ற
மாவா ழந்தமின் மூன்றடி கொண்டல்
கடையய னேரிசை தருக்கிய கன்று
தரவொன் றசையடி வளங்கெழு தரவே
குடநிலை யடிவரை கொய்தினை குறளடி
மடப்பிடி பண்பார் தென்றன்மூ வொன்பான்
செய்யு ளியலெனச் செப்பிடு மோத்தே.
 

----


     (பி - ம்.) 1. ளென்றோதுவர் பத்தைத்துமே. 2. எண்பாவ. 3. றாவொன்றசையடி.