| [' இஉ இரண்டின் குறுக்கத் தளைதப நிற்புழி யொற்றாம் நிலைமைய வாகும்' 'உயிரள பேழு முரைத்த முறையான் வருமெனி னவ்வியல் வைக்கப் படுமே' |
என்றார் காக்கைபாடினியார்.] |
| 'தளைசீர் வண்ணந் தாங்கெட வரினே குறுகிய விகரமுங் குற்றிய லுகரமும் அளபெடை யாவியு மலகியல் பிலவே |
என்பது யாப்பருங்கலம் (சூ. 4.) |
'ஐகாரம் நைவேல் ஓருங் குறிலியல்' எ - து. ஒன்றரை மாத்திரை என்று ஓதப்பட்ட, ஐகாரக் குறுக்கம் குற்றெழுத்தே போலக் கொண்டு அலகிடப்பெறும் எ-று. 'ஓரும்' என்பது இடைச்சொல். |
| 'குறுமை யெழுத்தி னியல்பே யைகாரம் நெடுமையி னீங்கியக் கால்' |
எனவும், |
| 'ஈறு மிடையு மிணைந்து மிணையசை யாகுமை யென்ப வறிந்திசி னோரே' |
(யா - வி. 9) |
எனவுஞ் சொன்னார் ஆகலின். |
| 8 'அன்னையை நோவ தவமா லணியிழாய் 9 புன்னையை நோவன் புலந்து.' ' (8) நடைக்குதிரை யேறி நறுந்தார் வழுதி அடைப்பையாய் கோறா வெனலும் - அடைப்பையான், சுள்ளற் சிறுகோல் கொடுத்தான் 10 றனைப்பெறினும் கொள்ளாதி யாங்காண் டலை.' 'கெண்டையை வென்ற கிளரொளி யுண்கணாள் பண்டைய ளல்லள் படி.' |
இவற்றுள் ஐகாரக் குறுக்கம் குற்றெழுத்தே போலக் குறிலோடும் நெடிலோடும் கூடி நின்று நிரையசை யாயின. |
|
(8) அடைப்பையான் - வெற்றிலை பாக்குப் பெட்டியைத் தூக்கு பவன். கோல் தா எனலும். சுள்ளற் சிறு கோல் - சுள்ளென்று அடிப்பதற்கு ஏற்ற வளைந்த கோல். அதன்வேகம் நாம் காண்டலைக் கொள்ளாது. |
|
(பி - ம்.) 8. அன்னையையா னோவ தெவன்மா. 9. புன்னையை யானோ' 10. றலைப்பெறினும், எள்ளாதியாங்கண்டிலம். |