அசையின் புறனடை |
| 37. விட்டிசைத் தல்லான் முதற்சுட் டனிக்குறி னேரசையென் றொட்டப் படாததற் குண்ணா னுதாரண மோசைகுன்றா நெட்டள பாய்விடி னேர்நேர் நிரையொடு நேரசையாம் இட்டத்தி னாற்குறில் சேரி னிலக்கிய மேர்சிதைவே. |
இ - கை. ஒருசார் அசைகட்கு எய்தியதோர் இலக்கண முணர்த்....று. |
'விட்டிசைத் தல்லான் முதற்கண் தனிக்குறில் நேரசை என்று ஒட்டப்படாது' எ - து. மேல் பொது வகையாய், தனிக் குறில் நேரசை என்றார் (கா. 1) ஆயினும், (1) விட்டிசைத்து நின்றபொழுதல்லது மொழிக்கு முதற்கண் நின்ற தனிக் குற்றெழுத்து நேரசை யாகாது. எனவே, விட்டிசையாத வழி மொழிமுதற்கண் தனிக்குறில், குறிலோடும் நெடிலோடும் கூடி நிரையசையாம் என்பதாயிற்று. |
'அதற்கு உண்ணான் உதாரணம்' எ - து: |
வெண்பா |
| ' (2) உண்ணா னொளிநிறா னோங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ இழந்தானென் றெண்ணப் படும்.' |
(நாலடி. 9.) |
இதனுள் அஆ என்புழி அருளின்கட் குறிப்பாய், விட்டி சைத்துக் குற்றெழுத்து மொழிக்கு முதற்கண் நேரசையாயினவாறும், அல்லாத வழி பிறவற்றின் குறிலோடும் நெடிலோடும் கூடி நிரையசை ஆயினவாறும் கண்டுகொள்க. |
வெண்பா |
| ' (3) வெறிகமழ் தண்புறவின் வீங்கி யுகளும் மறிமுலை யுண்ணாமை வேண்டிற் - பறிமுன்கை |
|
(1) விட்டிசைத்தல் - வருமொழியோடு தொடர்தலின்றி வேறுபட்டு ஒலித்தல் (2) ஒளி என்பது தான் உளனாய காலத்து விளங்குதல்; புகழ் என்பது தான் இறந்த பின்பும் உளதாம் பெயர். கொன்னே - பயனின் றியே, கொன்னே பொருள் காத்திருப்பானேல்' என்று கூட்டுக. (3) புறவின் - முல்லை நிலத்தில். மறி - ஆட்டுக் குட்டி பறி - பனை |