ஒழிபியல் 'விட்டிசைத் தல்லான்'

145

 
அஉ மறியா வறிவி லிடைமகனே
நொஅலைய னின்னாட்டை நீ.'
 
     இது தற்சுட்டின் கண்ணும் ஏவற் கண்ணும் வந்தது. 'அ உம் அறியா' என்பது
அகரம், தன்னையே சுட்டினமையின்' தற்சுட்டு; 'நொ' என்பது 'இன்னதொன்றைச் செய்'
என்றமையின் ஏவல்.
 
  'அ அவனும் இ இவனும் உ உவனுங் கூடியக்கால்
எ எவனை 1வெல்லா ரிகல்?'
 
     இது சுட்டின் கண்ணும் வினாவின் கண்ணும் வந்தது; இவற்றுள் 'அ அவனும், இ
இவனும், உ உவனும்' என்பன சுட்டு; 'எ எவனை' என்பது வினா எனக் கொள்க.
 
     4) இவ்வைந்தும் மொழி முதற்கண் விட்டிசைத்து வந்தன.
 
     'விட்டிசைத்தல்லால் முதற்கண் தனிக்குறில் நேரசை யாகாது' என்னாது,
'ஒட்டப்படாது' என்று சிறப்பித்தவதனால் மொழிக்கு மூன்றிடத்தும் விட்டிசைத்து வந்து
குற்றெழுத்து நேரசையாம் என்பதூஉம், விட்டிசைத்து நிற்பதுதான் குறிப்பின் கண்ணும்,
ஏவற் கண்ணும், தற்சுட்டின் கண்ணும், வினாவின் கண்ணும், சுட்டின் கண்ணும்
என்பதூம், விட்டிசைத்து வந்த குற்றெழுத்து மற்றோர் எழுத்தினோடு கூடி நிரையசை
ஆகாது என்பதூஉம் கொள்க.
 
  'அஇ உஎ ஒ இவை குறிய மற்றைய
ஏழ்நெட் டெழுத்தா நேரப் படுமே'
 
     என, தற்சுட்டின்கண் குற்றெழுத்து மொழிக்க மூன்றிடத்தும் விட்டிசைத்து நேரசை
யாயிற்று. ஏவல் முதலியவற்றின்கண் நின்ற குற்றெழுத்து மொழிக்கு மூன்றிடத்தும்
விட்டிசைத்து நேரசையாயினவாறு வந்தவழிக் கண்டு கொள்க.
 

     யோலைப்பாய் ; 'பறிப்புறத் திட்ட பானொடையிடையன்' (நற், 142.) அஉம் - அ
என்ற எழுத்தையும். நொ அலையல் - துன்பப் படுத்தாதே.
      (4) ஐந்தும் என்றது, குறிப்பு, தற்சுட்டு. ஏவல், சுட்டு, வினா என்ற ஐந்தனிடத்தும்
விட்டிசைத்து வந்த குற்றெழுத்தினை.
 

     (பி - ம்) 1. வெல்வா ரிகல்.