146

யாப்பருங்கலக் காரிகை

 
'ஏவல் குறிப்பே தற்சுட் டல்வழி
யாவையுந் தனிக்குறின் முதலசை யாகா
சுட்டினும் வினாவினு முயிர்வரு காலை
ஒட்டி வரூஉ மொருசாரு முளவே'
என்றார் மயேச்சுரர்.
 
     'ஓசை குன்றா நெட்டளபாய்விடின் நேர் நேர்' எ - து. நெட்டெழுத்து
அளபெடுத்து வருமெனின் அஃது இரண்டு நேரசையாக வைக்கப்படும் எ - று.
 
     'ஓசை குன்றா' என்று மிகுத்துச் சொல்லியவதனால் மூன்று மாத்திரையின் மிக
உச்சரிப்பினும் நேர் நேராக வைக்கப்படும் எ - று.
 
     'நிரையொடு நேரசையாம் இட்டத்தினால் குறில் சேரின்' எ - து.
குற்றெழுத்தினோடு புணர்ந்த நெட்டெழுத் அளபெடுத்து வந்தால் அவை.
[இரண்டினையும் கூட்டி] நிரையசையும், நேரசையுமாக வைக்கப்படும் எ - று.
 
     'இலக்கியம் ஏர் சிதைவே' எ - து.
 

குறள் வெண்பா

  ' (5) ஏஎர் சிதைய வழாஅ லெலாஅநின்
சேயரி சிந்திய கண்'
 
     என்னும் இப்பாட்டு நேர் நேர் ஆதற்கும், நிரை நேர் ஆதற்கும். இலக்கியம்
எனக் கொள்க. இதனுள் 'ஏஎர்' என்பது நேர் நேராயிற்று; அழாஅல்' என்பதும்,
'எலாஅ' என்பதும் நிரை நேராயின.
 
     'இட்டத்தினால்' என்று சிறப்பித்தவதனால் பின்பு நின்ற குற்றெழுத்தினோடும்
நெட்டெழுத்தினோடும் கூடி அளபெடை நிரையசை ஆகாதெனக் கொள்க.
 
  'தனிநிலை யளபெடை நேர்நே ரியற்றே
இறுதிநிலை யளபெடை நிரைநே ரியற்றே'
 
என்றார் பிறருமெனக் கொள்க.
 

(2)


     (5) ஏஎர் - அழகு. அழாஅல் - அழாதே. எலாஅ - தோழியே.