சீர்க்கும் தளைக்கும் புறனடை |
| 38. மாஞ்சீர் கலியுட் புகாகலிப் பாவின் விளங்கனிவந் தாஞ்சீ ரடையா வகவ லகத்துமல் லாதவெல்லாந் தாஞ்சீர் மயக்குந் தளையுமஃ தேவெள்ளைத் தன்மைகுன்றிப் போஞ்சீர் கனிபுகிற் புல்லா தயற்றளை பூங்கொடியே. |
இ - கை. சீருந் தளையுஞ் செய்யுளகத்து நிற்பதோர் முறைமை யுணர்த்....று. 'மாஞ்சீர் கலியுட் புகா' எ - து - தேமா புளிமா என்னும் இரண்டு நேரீற்று இயற்சீரும் கலிப்பாவினுட் புகப்பெறா எ - று. 'கலிப்பாவின் விளங்கனி வந்து ஆம் சீர் அடையா' எ - து. கருவிளங்கனி கூவிளங்கனி என்னும் நிரை நடுவாகிய வஞ்சியுரிச் சீர் இரண்டும் கலிப்பாவினுட் புகப்பெறா எ - று. |
'அகவலகத்தும்' எ - து. ஆசிரியப்பாவினுள்ளும் கருவிளங்கனி விளங்கனியென்னும் நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீர் இரண்டும் புகப் பெறா எ - று. 'அல்லாத எல்லாம் தாம் சீர் மயங்கும்' எ - து. ஒழிந்த சீர் எல்லாப் பாவினுள்ளும் பாவினத்துள்ளும் புக்கு மயங்கப்படும் எ - று. 'தளையும் அஃதே' எ - து. நான்கு பாவிற் றளையும் எல்லாப் பாவினுள்ளும் பாவினத்துள்ளும் வந்து மயங்கப்படும் எ - று. |
'வெள்ளைத் தன்மை குன்றிப் போம் சீர் கனி புகில்' எ - து. எல்லாச் சீரும் எல்லாப் பாவினுள்ளும் பாவினத்துள்ளும் புக்கு மயங்கப்பெறும் என்றார் ஆயினும், தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி என்னும் வஞ்சியுரிச்சீர் நான்கும் வெண்பாவினுட் புகப்பெறா, புகில் வெள்ளோசை யழிந்து வேறுபட்டு ஓசையுண்ணாது கெடும் எ - று, 'புல்லாது அயற்றளை' எ - து. எல்லாப் பாவினுள்ளும் பாவினத்துள்ளும் எல்லாத் தளையும் புக்கு மயங்கப்பெறும் என்றார் ஆயினும், வெண்பாவினுள் வெண்சீர் வெண்டளை ஒன்ற |
|
(பி - ம்.) 1. செப்பலோசை. |