148

யாப்பருங்கலக் காரிகை

 
லும் இயற்சீர் வெண்டளை ஒன்றலும் அல்லது வேற்றுத்தளை விரவா எ - று.
 
     'பூங் கொடியே' எ - து. மகடூஉ முன்னிலை.
 

வரலாறு

     'குடநிலைத் தண்புறவில்....சென்ற வாறே' (கா. 21, மேற்.) என்னும் (1) தரவு
கொச்சகக் கலிப்பாவினுள் நிரையீற்று ஆசிரிய வுரிச்சீரும் 2நேர்நடுவாகிய
வஞ்சியுரிச்சீரும் வந்து, வெண்டளையும் ஆசிரியத்தளையும் கலித்தளையும்
வஞ்சித்தளையும் புக்கு மயங்கிய வாறு கண்டுகொள்க. நேரீற்று ஆசிரிய வுரிச்சீரும்,
நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் வருதலில்லாமையும் கண்டு கொள்க.
 

ஆசிரியப்பா

  'நெடுவரைச் சாரற் குறுங்கோட்டுப் பலவின்
விண்டுவார் தீஞ்சுளை வீங்குகவுட் கடுவன்
உண்டு சிலம்பேறி யோங்கிய விருங்கழைப்
படிதம் பயிற்று மென்ப
மடியாக் கொலைவி லென்னையர் மலையே.'
 
     இவ்வாசிரியப் பாவினுள் தன்சீரும் வெண்சீரும் நேர் நடுவாகிய வஞ்சியுரிச்சீரும்
வந்து, தன்றளையும் வெண்டளையும் கலித்தளையும் வஞ்சித்தளையும் மயங்கி வந்தவாறு
கண்டுகொள்க. நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் வாராமையும் கண்டு கொள்க.
 
'மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும்'

(புறநா. 2.)

3புன்காற் புணர்மருதின்
4போதப்பிய புனற்றாமரை.'
 

     (1) இது பிரிந்திசைந் துள்ளலோசைக்கு மேற்கோள். கா. 21 ; தனிச் சொல்லும்
சுரிதகமும் பெற்று வந்த தரவு கொச்சகக் கலிப்பா; கா. 32, உரை.
 

     (பி - ம்) 2. வெண்பாவுரிச்சீரும், நேர்நடு. 3. புன் காய்ப். 4. போதரும்பிய.