| தேன்றாட் டீங்கரும்பின் பூந்தாட் புனற்றாமரை வார்காற் செங்கழுநீர்.' |
இக்குறளடி வஞ்சிப்பாக்களுள் (2) தன்சீரும் வெண்சீரும் நேரீற்று இயற்சீரும் வந்து 5வஞ்சித்தளையும் வெண்டளையும், ஆசிரியத்தளையும் கலித்தளையும் 6விரவி வந்தவாறு கண்டுகொள்க.
['முழங்குதிரைக் கொற்கை வேந்தன்.....வேறாபவே' (கா. 27, மேற்) என்னும் வேற்றொலி வேண்டுறையுள் வஞ்சியுரிச்சீரும் இயற்சீரும் வெண்சீரும் வந்து, வஞ்சித்தளையும் ஆசிரியத்தளையும் கலித்தளையும் தட்டு மயங்கியவாறு கண்டு கொள்க.] |
கலி விருத்தம் |
| ' (3) வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மவ்வல் நளிர்கொடியன நறுவிரையன நகுமலரன வகுளம் குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன 7கோங்கம் ஒளிர்கொடியன 8வுயர்தளிரன வொழுகிணரன வோடை.' |
(சூளா. தூது. 4.) |
இக்கலிவிருத்தத்துள் (4) நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் நேரீற்று இயற்சீரும் [வந்து வஞ்சித்தளையும், இயற்சீர் வெண்டளை யும்] மயங்கி வந்தவாறு கண்டுகொள்க. நேரீற்று இயற்சீர் கலிப்பாவினுள் வாராத வாறும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் கலிப்பாவினுள்ளும் ஆசிரியப்பாவினுள்ளும் வாராதவாறும், வெண்பாவினுள் வஞ்சியுரிச்சீர் வாராத |
|
(2) 'நிலனேந்திய விசும்பும்' என்ற தொடக்கத்து அடிகள் வஞ்சித்தளை வந்தவை; 'புன்காற் புணர்மருதின்', பூந்தாட் புனற்றாமரை' என்பன வெண்டளை வந்தவை; 'தேன்றாட் டீங்கரும்பின்', 'வார்காற் செங்கழுநீர்' என்பன ஆசிரியத்தளை வந்தவை; 'மண்டிணிந்த நிலனும்' என்பது கலித்தளை வந்தது. (3) மவ்வல் - காட்டு மல்லிகை. வகுளம் - மகிழ மரம். குழை மாதவி - தளிர்களோடு கூடிய குருக்கத்திக்கொடி. இணர் - பூங்கொத்து. ஓடை - ஒரு மர விசேடம். (4) ஒவ்வோர் அடியிலும் ஈற்றிலுள்ள சீர் நேரீற்றியற்சீர்; மற்றவை நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீர்கள். |
|
(பி - ம்.) 5. தன்றளையும். 6. மயங்கி. 7. கொகுடி. 8. வுயர்தளிரி னோடொழு, வுயர்திரளினோடொழு. |