150

யாப்பருங்கலக் காரிகை

 
     வாறும் வேற்றுத்தளை மயங்காமையும் மேற்காட்டிய செய்யுள கத்துள்ளும்
பிறவற்றுள்ளும் ஆராய்ந்து கண்டுகொள்க.

     நேரீற்று இயற்சீர் வெண்கலியுள்ளும் கொச்சகக் கலியுள்ளும் வருதலும், நிரை
நடுவாகிய வஞ்சியுரிச்சீர் கொச்சகக் கலியுள் அருகி வருதலும் செய்யுளோத்தினுள்ளே
சொல்லப்பட்ட தெனக் கொள்க.
 

வெண்பா

  ` (5) குலாவணங்கு வில்லெயினர் கோன்கண்டன் கோழி
நிலாவணங்கு 9வெண்மணன்மே னின்று-புலாலுணங்கல்
கொள்ளும்புட் காக்கின்ற கோவின்மையோ 10நீபிறர்
உள்ளம்புக் காப்ப துரைழு
 
     என்று இத்தொடக்கத்த வொருசார் வெண்பாவினுள் (6) வஞ்சி யுரிச்சீர்
வந்தனவாலோ எனின் திருவள்ளுப்பயன், நாலடி நானூறு முதலாகிய கீழ்க்கணக்குள்ளும்
முத்லொள்ளாயிரம் முதலாகிய பிற சான்றோர் செய்யுளுள்ளும் வஞ்சியுரிச்சீர்
வாராமையானும், வெண்பாவினுள் வஞ்சியுரிச்சீர் வருக என்னும் ஓத்தில்லாமையானும்
வேற்றுத்தளை வெண்பாவினுள் விரவாமையானும், இத்தொடக்கத்தன குற்றமல்லது
குணமாகாவென்பது காக்கை பாடினியார் முதலாகிய தொல்லாசிரியர் துணிவு; இதுவே
இந் நூலுடையார்க்கும் உடன்பாடு.
 
  `இயற்சீர் 11நேரீற் றதன்றளை யுடைய
கலிக்கியல் பிலவே காணுங் காலை
 

     (5) குலா - மகிழ்ச்சியையுடைய. வணங்குவில் - வளைந்தவில். கண்டன் -
சோழன். கோழி - உறையூர். நிலா வணங்கு மணல் - தன் ஒளியினால் நிலவைத்
தாழ்த்தும் மணல்ழு என்றேனும், `நிலவானது தோற்று வணங்குகின்ற மணல்ழு என்றேனும்
பொருள் கொள்வர். உணங்கல் - வற்றல். புள்காக்கின்ற - பறவைகளை ஓட்டுகின்ற,
கோ - தந்தை. உள்ளம் புக்கு ஆப்பது - என் உள்ளத்திற் புகுந்து அதனைக் கட்டுவது.

      (6) `கோவின்மையோழு என்பது வஞ்சியுரிச்சீர். இதனுள் `வின்மைழு என்பதை
நடுவிலுள்ள மெய்யை நீக்கி, `விமைழு எனக் கொண்டு இச்சீரைப் பிற்காலத்தார்
கூவிளங்காயாகக் கொள்வர். `சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுந் தான்கண்டுழு (நள.),
`ஈதலறந் தீவினைவிட் டீட்டல்பொரு ளெஞ் ஞான்றும்ழு (தனிப்) என்னும் வெண்பா
வடிகளில் இத்தகைய வஞ்சியுரிச்சீர் பயின்றுள்ளமை காண்க.
 

     (பி - ம்) 9. நொய்மணன்மே. 10. நீபிறந்து 11. நேரீற்றுத்.