| வஞ்சி யுள்ளும் வாரா வாயினும் ஒரோவிடத் தாகு மென்மனார் புலவர்' |
என்றார் பல்காயனார். |
| 'நிரைநடு வியலா வஞ்சி யுரிச்சீர் கலியினொ டகவலிற் கடிவரை யிலவே' 'வெள்ளையுட் பிறதளை விரவா வல்லன எல்லாத் தளையு மயங்கியும் வழங்கும்' |
என்பன யாப்பருங்கலம். (சூ. 16, 22.) |
(3) |
_ _ _ |
அடி மயக்கம் |
| 39. இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாத மகவலுள்ளான் மயக்கப் படாவல்ல வஞ்சி மருங்கினெஞ் சாவகவல் கயற்கணல் லாய்கலிப் பாதமு நண்ணுங் கலியினுள்ளான் முயக்கப் படுமுதற் காலிரு பாவு முறைமையினே. |
இ.....கை. என்னுதலிற்றோவெனின் (1) அடிமயக்கம் ஆமாறு உணர்த்.....று. 'இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாதம் அகவலுள்ளான் மயக்கப்படாவல்ல' எ - து. - இயற்சீர் வெண்டளையான் வந்த வெண்பாவடியும் வஞ்சியடியும் ஆசிரியப்பாவினுள் மயங்கப் பெறும் எ - று. என்னை? |
| 'இயற்சீர் வெள்ளடி யாசிரிய மருங்கு நிலைக்குரி மரபி ளிற்கவும் பெறுமே' |
என்றார் தொல்காப்பியனார் (பொருள். சூ. 374.) |
| 'வஞ்சி விரவ லாசிரிய முரித்தே வெண்பா விரவினுங் கடிவரை யிலவே' |
என்றார் 1பல்காயனார். |
|
(1) அடிமயக்கம் - ஒருபாவுக்குரிய அடி மற்றொரு பாவில் பயின்று வருவது |
|
(பி - ம்.) 1. நத்தத்தனார். |