| மடங்க லுண்மை மாயமோ வன்றே கள்ளி வேய்ந்த முள்ளியம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலு ளாங்கண் உப்பிலாஅ வவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்கா திழிபிறப்பினோ னீயப்பெற்று நிலங்கல னாக விலங்குபலி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே' |
(புறநா. 363.) |
இவ்வாசிரியப் பாவினுள் 'உப்பிலாஅ வவிப்புழுக்கல்' எனவும், 'கைக்கொண்டு பிறக்கு நோக்கா' எனவும், 'இழிபிறப்பினோ னீயப்பெற்று' எனவும் வஞ்சியடி விரவி வந்தவாறு கண்டுகொள்க. ['இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாதம் அகவலுள்ளான்] மயக்கப்படும்' என்னாது 'மயக்கப்படா வல்ல' என்று இருகால் விலக்கிச் சொன்னமையால் வெண்சீர் விரவிய இயற்றளை வெள்ளடியும் கலியடியும் ஆசிரியத்துள் அருகி வரப் பெறும் எனக் கொள்க. |
வரலாறு |
நேரிசையாசிரியப்பா |
| ' (4) அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டெனப் பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி ஏதின் மாக்களு நோவர் தோழி என்று நோவா ரில்லைத் தண்கடற் சேர்ப்ப னுண்டவென் லைக்கே.' |
இவ்வாசிரியத்துள், 'அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டென' வென்பது வெண்சீர் விரவிய இயற்றளை வெள்ளடி. இதனை, |
|
(4) மதியம் அரவின்வாய்ப்படுதல். சந்திரகிரகணம் உண்டாதல். பூசல் வாயா - ஆரவாரம் அற்ற. ஏதில் மாக்கள் - அன்னியர். சந்திர கிரகண காலத்தில் மக்கள் வருந்துதல் ஒழிய அம்மதியின் இடுக்கணைக் களைகுநர் இல்லை என்றவாறு; 'அரவுநுங்கு மதியினுக் குவணோர் போலக் களையாராயினுங் கண்ணினிது படீஇயர்' (குறுந். 395.) என்நலக்கு - என் நலம் அழிந்ததற்கு. |