154

யாப்பருங்கலக் காரிகை

 

குறள் வெண்பா

  'அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டெனப்
பொங்கிய பூசல் பெரிதுழு
 
என உச்சரித்து வெள்ளடியாமாறு கண்டுகொள்க.
 

ஆசிரியப்பா

 
' (5) குருகுவேண் டாளி கோடுபுய்த் துண்டென
மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது
மருள்பிடி திரிதருஞ் 4சாரல்
அருளா னாகுத லாயிழை கொடிதே.ழு
 
     இவ்வாசிரியத்துள் இரண்டாம் அடி கலியடி. இதனை.
 
  'மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது
தீவழங்கு சுழல்விழிக்கட் சீயஞ்சென் றுழலுமேழு
 
என வுச்சரித்துக் (6) கலியடி யாமாறு கண்டுகொள்க.

      'வஞ்சி மருங்கின் எஞ்சா அகவல் கலிப்பாதமும் நண்ணும்ழு
எ - து. வஞ்சிப்பாவினுள் ஆசிரியவடியும் கலியடியும் வந்து மயங்கப்பெறும் எ - று.

      'எஞ்சாவகவல்ழு என்று சிறப்பித்தவதனால் வஞ்சியுள் ஆசிரியவடி பயின்றுவரும்,
கலியடியும் அருகியன்றி வாரா எனக் கொள்க.

      'கலிப்பாதமும்ழு என்ற உம்மையால் வஞ்சியுள் வெள்ளடியும் அருகிவந்து
மயங்கப்பெறும்.

      'கயற்கண் நல்லாய்ழு எ - து. மகடூஉ முன்னிலை.

      பட்டினப்பாலை என்னும் (7) வஞ்சிநெடும் பாட்டினுள் ஆசி
 

     (5) குருகு வேண்டு ஆளி - குருத்தை விரும்புகின்ற சிங்கம். 'குவட்டு மால்கரிக்
குருகுதேர் அரிழு (கந்த. ஆற்றுப். 14.) உண்டென - களிற்றை உண்டதாக. மாவழங்கு -
கொடிய விலங்குகள் திரிகின்ற. சாரவில் தலைவன் அருளாதவனாக இருத்தல் கொடிது.
இது தலைவி கூற்று.

     (6) கலிப்பாவினுள் இது தாழிசை என்னும் உறுப்பு.

      (7) வஞ்சியடிகள் விரவிவந்தமையின்பட்டினப்பாலையை வஞ்சிநெடும் பாட்டு
என்றும் கூறுவர்.
 

     (பி - ம்.) 4. சோலை.