ரியவடி பயின்றும் கலியடியும் வெள்ளடியும் அருகியும் வந்தனவும் உளவெனக் கொள்க. |
| 'நேரிழை மகளி ருணங்குணாக் கவரும்' |
(பட்டினப், 22.) |
என்ற இத்தொடக்கத்தன ஆசிரியவடி. |
| 'கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை' |
(பட்டினப், 23.) |
என்பது (8) இயற்றளை வெள்ளடி. இதனைக், |
குறள் வெண்பா |
| ' (9) கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை யாழிசூழ் வையக் கணி' |
என உச்சரித்து வெள்ளடியாமாறு கண்டுகொள்க. |
| 'வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர் மலைந்தும்' |
(பட்டினப். 64-5.) |
என்பது கலியடி இதனை. |
| 'வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர்மலைந்தும் கயல்நாட்டக் கடைசியர்தங் காதலர்தோள் கலந்தனரே' |
என வுச்சரித்துக் (10) கலியடியாமாறு கண்டுகொள்க. 'கவியினுள்ளான் முயக்கப்படும் (11) முதற்கால் இருபாவும் முறைமையினே ' எ - து. கலிப்பாவினுள் வெண்பாவும் ஆசிரியப்பாவும் புக்கு மயங்கப்படும் எ - று. 'முறைமையினே' என்பது - வரலாற்ற முறைமையோடுங் கூட்டி மயக்க முறைமை செய்து வழங்கப்படும் எ - று. 'காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்' (கலி. 38.) என்னும் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவினுள் வெண்பாவும் ஆசிரியப்பாவும் மயங்கி வந்தவாறு கண்டு கொள்க. |
|
(8) இயற்றளை வெள்ளடி - இயற்சீர் வெண்டளையான் வந்த வெண்பாவடி. (9) கனங்குழை - குழையை யணித்த பெண். வையக்கு - பூவுலகுக்கு. (10) கலிப்பாவினுள் இது தாழிசை என்னும் உறுப்பு. (11) வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி. எனக் கிடந்த வரன் முறையான் முன்பில் இரண்டும், 'முதற்கால் இருபா' எனப்பட்டன. |