| 'வெண்பா விரவினுங் கடிவரை யின்றே' |
என்றார் 5நத்தத்தனார். |
| 'ஆசிரியப் பாவி னயற்பா வடிமயங்கும் ஆசிரியம் வெண்பாக் கலிக்கண்ணாம் - ஆசிரியம் வெண்பாக் கலிவிரவும் வஞ்சிக்கண் வெண்பாவின் ஒண்பா வடிவிரவா வுற்று.' |
(நாலடி நாற்பது.) |
இதனை விரித்துப் பொருளுரைத்துக் கொள்க. |
(4)
|
|
(பி - ம்.) 5. நற்றத்தனார். |
_ _ _ |
அடிக்கும் தொடைக்கும் புறனடை |
| 40. அருகிக் கலியோ டகவன் மருங்கினைஞ் சீரடியும் வருதற் குரித்தென்பர் வான்றமிழ் நாவலர் மற்றொருசார் கருதிற் கடையே கடையிணை பின்கடைக் கூழையுமென் றிரணத் தொடைக்கு மொழிவ ரிடைப்புண ரென்பதுவே. |
இ.....கை ஒருசார் அடிக்கும் தொடைக்கும் எய்தியதோர் இலக்கண முணர்த்....று. 'அருகிக் கலியோடு அகவல் மருங்கின் ஐஞ்சீர் அடியும் வருதற்கு உரித்தென்பர் வான் தமிழ் நாவலர்' எ - து. ஒருசார் கலிப்பாவினுள்ளும் ஆசிரியப்பாவினுள்ளும் ஐஞ்சீரடியும் அருகி வரப்பெறும் என்று சொல்லுவர் புலவர் எ - று. |
வரலாறு |
| ' (1) அணிகிளர் 1சிறுபொறி யவிர்துத்தி மாநாகத் தெருத்தேறித் துணியிரும் பனிமுந்நீர்த் தொட்டுழந்து 2மலைந்தனையே.' |
இக்கலிப்பாவினுள் முதலடியின் ஐஞ்சீர் வந்தவாறு கண்டு கொள்க. |
நேரிசையாசிரியப்பா |
| ' (2) உமணர்ச் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா |
|
(1) பொறி - புள்ளிகள். அவிர் துத்தி - விளங்குகின்ற படம். மலைந்தவன் கண்ணன். இது தாழிசை. (2) உமணர் - உப்பு வாணிகர். சேர்ந்து கழிந்த - கூடிக் கடந்து சென்ற. |
|
(பி - ம்.) 1. பொறியவிர். 2. மலர்ந்தனையே. |