| டின்னா வென்றி ராயின் இனியவோ பெரும 3தமியோர்க்கு மனையே' |
(குறுந் 124.) |
இவ்வாசிரியத்துள் முதலடி ஐஞ்சீரான் வந்தவாறு கண்டு கொள்க. |
| ['சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே' |
(கா. 28. மேற்.) |
என்னும் இணைக்குறளாசிரியப்பாவினுள் ஐஞ்சீரடியும் வந்தவாறு கண்டு கொள்க.] |
| 'வெண்டளை விரவியு மாசிரியம் விரிவியும் ஐஞ்சீ ரடியு முளவென மொழிப' |
என்றார் தொல்காப்பியனார் (பொருள். சூ. 375.) |
| (3) வெண்பாவினுள் ஐஞ்சீரடி வரப்பெறாதெனக் கொள்க. 'ஐஞ்சீ ரடுக்கலு மண்டில மாக்கலும் வெண்பா யாப்பிற் குரிய வல்ல' |
என்று நத்தத்தனார் அடிநூலினுள் எடுத்தோதினார். 'மற்றொருசார் கருதில் கடையே கடையிணை பின்கடைக் கூழையும் என்று இரணத்தொடைக்கும் மொழிவர் இடைப்புணர் என்பதுவே' எ - து. ஒருசாராசிரியர் முரண்தொடையைக் கடைமுரணும், கடையிணை முரணும், பின்முரணும், கடைக் கூழை முரணும், இடைப்புணர் முரணும் என்று வேண்டுவர் எ - று. இரணத் தொடை எனினும் பகைத்தொடை எனினும் முரண்டொடை எனினும் ஒக்கும். என்னை? |
|
ஊர் பாழ்த்தன்ன - ஊர் பாழாகப் போனது போன்ற. ஓமை - ஒரு மர விசேடம், இது தோழி கூற்று. |
| (3) வெண்பாவினுள் ஒரோவிடத்து ஐஞ்சீரடியும் வருதலுண்டு - உ - ம் : உதிரந் துவரிய வேங்கை யுகிர்போல் எதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார் நீங்க - எதிருநர்க் கின்பம் பயந்த விளவேனில் காண்டொறும் துன்பங் கலந்தழியு நெஞ்சு. |
(ஐந்திணை ஐம். 31.) |
இங்ஙனம் வருதல் பலர்க்கு உடன்பாடன்று. |
|
(பி - ம்) 3. தமியேற்கு. |