158

யாப்பருங்கலக் காரிகை

 
4' மொழியினும் பொருளினு முரணத் தொடுப்பின்
இரணத் தொடையென் றெய்தும் பெயரே'

(காக்கை பாடினியார்.)
 

'மொழியினும் பொருளினு முரணுதன் முரணே.'

(தொல். பொருள், சூ. 407; யா. வி. சூ. 38.)
 

  'மறுதலை யுரைப்பினும் பகைத்தொடை யாகும்'

(அவிநயனார்.)
 

எனவும் சொன்னார் ஆகலின்.
      [கடைமுரணாவது அடிதோறும் இறுதிச்சீர் முரணத் தொடுப்பது. கடையிணை
முரணாவது அடிதோறும் கடையிரு சீர் முரணத் தொடுப்பது. பின்முரணாவது
இரண்டாஞ் சீர்க் கண்ணும் நான்காஞ் சீர்க்கண்ணும் முரணத் தொடுப்பது. கடைக்
கூழை முரணாவது முதற்சீர்க் கண்ணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் முரணத்
தொடுப்பது. இடைப்புணர் முரணாவது நடு இருசீர்க் கண்ணும் முரணத் தொடுப்பது.]
 

வரலாறு

நேரிசை யாசிரியப்பா

  '5 கயன்மலைப் பன்ன கண்ணினை கரிதே
தடமுலை திவளுந் தனிவடம் வெளிதே
நூலினு நுண்ணிடை சிறிதே
ஆடமைத் தோளிக் கல்குலோ பெரிதே'
 
     இஃது அடிதோறும் கடைச்சீர் மறுதலைப்படத் தொடுத்த மையாற் கடைமுரண்டொடை.
 

நேரிசை யாசிரியப்பா

  ' (4) 6மீன்றேர்ந் தருந்திய கருங்கால் வெண்குருகு
தேனார் ஞாழல் 7விரிசினைத் தொகூஉம்
 
     (4) ஞாழல் - புலி நகக் கொன்றை. தொகூஉம் - கூட்டமாக இருக்கும்.
தவிர்ப்பவும் தவிரான் - நாம் தடுக்கவும் வாராமல் இரான். தேர் காணலம். பீர் -
பசலை. சிறுநுதல் : விளி. பீர் ஏர் வண்ணம் பெரிது காண்டும்.
 

     (பி - ம்.) 4. மொழியும் பொருளு முரணத். 5. கயலின் மலைந்த கண்ணிணை.
6. மீன்றேர்ந்து வருந்திய, மீனாய்ந் தருந்திய 7. விரிசினைக் குழூஉம்.