| தண்ணந் துறைவன் றவிர்ப்பவுந் தவிரான் தேரோ காணலங் காண்டும் பீரேர் வண்ணமுஞ் சிறுதல் பெரிதே.' |
இஃது அடிதோறும் கடை இரு சீரும் முரண்வரத் தொடுத்தமையாற் கடையிணை முரண். |
நேரிசை யாசிரியப்பா |
| ' (5) சார லோங்கிய தடந்தாட் டாழை கொய்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து தமிய மிருந்தன மாக நின்றுதன் நலனுடைப் பணிமொழி நன்குபல 8புகழ்ந்து வீங்குதொடிப் பணைத்தோ ணெகிழத் துறந்தோ னல்லனெம் மேனியோ தீதே.' |
இஃது [அடிதோறும்] கடைச்சீரும் இரண்டாஞ்சீரும் மறுதலைப் படத் தொடுத்தமையாற் பின் முரண். |
நேரிசை யாசிரியப்பா |
| ' (6) காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி பூவிரி சுரிமென் கூந்தலும் வேய்புரை தோளு மணங்குமா லெமக்கே. |
இது முதற் சீரொழிந்த மூன்று சீர்க்கண்ணும் மறுதலைப் படத் தொடுத்தமையாற் கடைக்கூழை முரண்டொடை. |
நிலைமண்டில வாசிரியப்பா |
| '(7) 9போதுவிரி குறிஞ்சி நெடுந்தண் மால்வரை கோதையிற் றாழ்ந்த வோங்குவெள் ளருவி 10காந்தளஞ் செங்குலைப் பசுங்கூ தாளி வேரல் விரிமலர் முகையொடு விரைஇப் |
|
(5) நல்லன் - நல்லவன். இப்பாட்டினுள் ஐந்தாமடியிலும் வீங்குதல் நெகிழ்தல் முரணாக வந்தன. (6) அணங்கும் - வருத்தும். ஆல் : அசை. எமக்கே - எம்மை : வேற்றுமை மயக்கம். (7) கோதை - மாலை. அருவிக்கு மாலை உவமை. கூதாளி - ஒரு மரவி சேடம். வேரல் - மூங்கில். விரைஇ - விரவி. அடி 2 - 4 இடைப் புணர் முரண். |
|
(பி - ம்.) 8. பயிற்றி. 9. போது விடு. 10 காந்தள்பசுங் குலைச் செங்கூதாளி. |