| (17) அளபெடை தனியிரண் டல்வழி ஐஒள உளதா மொன்றரை தனிமையு மாகும்' |
என்றார் ஆகலின். |
வரலாறு |
ஐப்பசி, மைப்புறம் என மொழி முதற்கண் ஐகாரங் குறுகின வாறு; மடையன், உடைவாள் என மொழிக்கிடையின்கண் ஐகாரம் குறுகினவாறு; குவளை, தவளை, தினை, பனை என மொழிக் கிறுதியின்கண் ஐகாரம் குறுகினவாறு. |
இனி அளபெடைக்குச் சொல்லுமாறு: |
அளபெடை இருவகைப்படும். உயிரளபெடையும் ஒற்றள பெடையும் என. (18) |
உயிருள் நெட்டெழுத்து ஏழும் அளபெடுக்கும். அவை அளபெடுக்கு மிடத்து ஐகாரம் இகரத்தோடு அளபெடுக்கும்; ஒளகாரம் உகரத்தோடு அளபெடுக்கும்; ஒழிந்தனவும் தமக்கு இனமாகிய குற்றெழுத்தோடு அளபெடுக்கும் எனக் கொள்க. |
| 'குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே' 'ஐ ஒள வென்னு மாயீ ரெழுத்திற் கிகர வுகர மிசைநிறை வாகும்' |
என்றார் தொல்காப்பியனார். |
(எழுத். சூ. 41-2.) |
அவை நான்கிடத்தும் வந்து அளபெடுக்கும். நான்கிடமாவன: தனிநிலையும், முதனிலையும், இடைநிலையும், கடைநிலையும் எனவிவை. என்னை? |
|
(17) இஃது அவிநயச் சூத்திரமென்பர்; யா. வி. சூ. 2 உரை: நன். சூ. 59 மயிலை சில பிரதிகளில் இச்சூத்திரத்திற்குமுன் 'முதலிடை கடையென மூன்றிடத் தொருசொல், அதனொடு குறுகு மைகார வெழுத்தே' என்ற வேறொரு சூத்திரமும் காணப்படுகிறது. இப்புதுச் சூத்திரம் சில பிரதிகளில், 'மொழிமுத லிடைகடை யெனமூன் றிடந்தும், அழியா தைகா ரங்குறு கும்மே' என்றுங் காணப்படுகிறது. (18) இதன்பின் சில பிரதியில் 'என்னை, உயிரள பெடையெழுத் தொற்றள பெடையெழுத், தவையிரண் டென்ப வளபெடை யெழுத்தே' என்றார் ஆகலின்' என்ற தொடர் காணப்படுகிறது. இதிற் கண்ட சூத்திரம் வேறொரு பிரதியில் 'உயிரள பெடையு மொற்றள பெடையுமென், றாயிரண் டென்ப வளபெடை தானே' என்று காணப்படுகிறது. |