| பெருமலைச் சீறூ ரிழிதரு நலங்கவர்ந் தின்னா 11வாயின மினியோர் மாட்டே.' |
இஃது இடை யிருசீர்க் கண்ணும் மறுதலைப்படத் தொடுத் தமையால் இடைப்புணர் முரண்டொடை. இவ்வாறு சொன்னார் கையனார் முதலாகிய ஒருசாராசிரியர் எனக் கொள்க. 'இரணத் தொடைக்கும்' என்ற உம்மையான் ஒழிந்த மோனை எதுகை இயைபு அளபெடை யென்னும் நான்கு தொடைக்கும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. [ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் என்பது தந்திரவுத்தியாகலின்.] அவை யெல்லாம் யாப்பருங்கலவிருத்தியுட் கண்டு கொள்க. |
(5) |
|
(பி - ம்) 11. வாயி னினியோர், வாகுக வினியோர், வாயின வினியோர் |
எதுகை மோனைகளுக்குப் புறநடை |
| 41. வருக்க நெடிலினம் வந்தா லெதுகையு மொனையுமென் றொருக்கப் பெயரா லுரைக்கப் படுமுயி ராசிடையிட் டிருக்கு மொருசா ரிரண்டடி மூன்றா மெழுத்துமொன்றி 1நிரக்கு மெதுகையென் றாலுஞ் சிறப்பில நேரிழையே. |
இ......கை ஒருசார் எதுகைக்கும் மோனைக்கும் எய்தியதோர் இலக்கணம் உணர்த்....று.
'வருக்கம் நெடில் இனம் வந்தால் எதுகையும் மோனையும் என்று ஒருக்கப் பெயரால் உரைக்கப்படும் எ - து. (1) வருக்கவெழுத்தும், நெடிலெழுத்தும், இனவெழுத்தும் எதுகையும் மோனையுமாய் வந்தால் அவற்றை வருக்க வெதுகை நெடி |
|
(1) க, கா, கி, கீ.......கௌ இவை கவர்க்கம். இங்ஙனமே சவர்க்கம், டவர்க்கம் என மற்ற உயிர் மெய்களுக்கும் கொள்க. |
|
(பி - ம்) 1. நிரைக்கு. |