லெதுகை இனவெதுகை என்றும், வருக்கமோனை நெடில்மோனை இனமோனை என்றும் பெயரிட்டு வழங்கப்படும் எ - று. |
வரலாறு |
இன்னிசை வெண்பா |
| ' (2) நீடிணர்க் கொம்பர்க் குயிலாலத் தாதூதிப் 2பாடுவண் டஞ்சி யகலும் 3பருவத்துத் தோடார் தொடிநெகிழ்த்தா ருள்ளார் 4படலொல்லா 5பாடமை சேக்கையுட் கண்' |
இது டகர மெய் வருக்க வெதுகை. |
| 'அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை.' |
(குறள். 37.) |
இது றகர மெய் வருக்க வெதுகை. |
| 'ஆவா வென்றே யஞ்சின ராழ்ந்தா ரொருசாரார்' |
(கா. 27, மேற்) |
இது இரண்டாமெழுத் தொன்றாதாயினும் இரண்டா மெழுத்தின்மே லேறிய நெடிலொப்புமை நோக்கி நெடிலெதுகை என்று வழங்கப்படும். இனவெதுகை மூன்றுவகைப்படும், வல்லின வெதுகை மெல்லின வெதுகை இடையினவெதுகை என. |
வரலாறு |
| 'தக்கார் தகவில ரென்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும்' |
(குறள். 114.) |
இது வல்லின வெதுகை. |
| 'அன்பீனு மார்வ முடைமை யதுவீனும் நண்பென்னு நாடாச் சிறப்பு.' |
(குறள். 74.) |
இது மெல்லின வெதுகை. |
|
(2) இணர் - பூங்கொத்து. தொடி நெகிழ்த்தார் - வளையல் கழலும்படி மெலியச் செய்த தலைவர். உள்ளார் - நம்மை நினையார். பாடு அமை சேக்கை - பெருமை பொருந்திய பாயல். சேக்கையுள்கண் படல் ஒல்லா. |
|
(பி - ம்.) 2. பாடும் வண். 3. பருவத்தும். 4. படலொல்லாப், படரொல்லார். 5.பாடாமைச். |