| 'எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.' |
(குறள், 229.) |
இஃது இடையின வெதுகை. இனி வருக்கமோனை முதலாகிய மூன்று மோனையும் வருமாறு : |
ஆசிரியப்பா |
| ' (3) பகலேபல் 6பூங்கானக் கிள்ளை யோப்பியும் பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇப் பின்னுப் 7பிணியவிழ்ந்த நன்னெடுங் கூந்தல் பீர்ங்கப் பெய்து தேம்படத் 3திருத்திப் புனையீ ரோதி செய்குறி 9நசைஇப் பூந்தார் மார்ப புனத்துட் டோன்றிப் பெருவரை யடுக்கத் தொருவே லேந்திப் பேயு மறியா மாவழங்கு 10பெருங்காட்டுப் பைங்க ணுழுவைப் படுபகை 11யொரீஇப் பொங்குசினந் தணியாப் 12பூநுத லொருத்தல் போகாது வழங்கு மாரிரு ணடுநாட் பௌவத் தன்ன பாயிரு ணீந்தி இப்பொழுது வருகுவை யாயின நற்றார் மார்ப தீண்டலெங் கதுப்பே.' |
இது பகரமெய் வருக்க மோனை. |
| 'ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.' |
(முதுமொழிக்காஞ்சி.) |
இது முதலெழுத்து ஒன்றாதாயினும் முதலெழுத்தின்மேல் ஏறிய நெடில் ஒப்புமை நோக்கி நெடில்மோனை என்று வழங்கப்படும். இனமோனை மூன்று வகைப்படும், வல்லின மோனையும் மெல்லின மோனையும் இடையின மோனையும் என. |
|
(3) இதனுள் அடிதோறும் முதற்கண் பகர வருக்கவெழுத்துப் பன்னிரண்டும் முறையே வந்தவாறு காண்க. |
|
(பி - ம்.) 6. பூங்கானற். 7. பிணியவிழ்ந் தன்ன நெடுங். 9. திருகிப். 9. நோக்கிப். 10. பெருங்காட்டுட். 11. வெரீஇப் பொருது; சினந் தணிந்த. 12. பூணுத. |