164

யாப்பருங்கலக் காரிகை

 
'அகர முதல..........யுலகு'

(கா. 25, மேற்.)

என்பதும்,
  'வடியேர்கண் ணீர் மல்க'

(கா. 18, மேற்.)

என்பதும் (5) ஓரெழுத்து ஒன்றி வந்தமையால் இடையாகெதுகை.
 

  'தக்கார் தகவிலர்'

(பக். 161)

என்பது (6) கடையா கெதுகை.
 
  'பற்றுக பற்றற்றான் பற்றினை யாப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு'

 (குறள், 350)

     இது சீர்முழுதும் ஒன்றி வந்தமையால் தலையாகு மோனை.
 
  'மாவும் புள்ளும் வதிவயிற் படர'

(கா. 18, மேற்.)

என்பது (7) இடையாகு மோனை.
 
  'பகலேபல் பூங்கானக் கிள்ளை யோப்பியும்'
என்பது (8) கடையாகு மோனை.

      'உயிராசிடை யிட்டிருக்கும் ஒருசார் இரண்டடி மூன்றாம் எழுத்தும் ஒன்றி
நிரக்கும் எதுகை என்றாலும் சிறப்பில' எ - து. உயிரெதுகை ஆசெதுகை இடையிட்
டெதுகை [என்னும் எதுகையும்], இரண்டடி யெதுகை மூன்றாமெழுத் தொன்றெதுகை
என்று இத்தொடக்கத்து ஒருசா ரெதுகையும் உள; ஆகிலும் அவை பெரியதோர்
சிறப்பில எனக் கொள்க.
 

வரலாறு

ஆசிரியப்பா

  'துளியொடு மயங்கிய தூங்கிரு ணடுநாள்
அணிகிளர் தாரோ யருஞ்சுர நீந்தி
 

     (5) ஓர் எழுத்து என்றது இரண்டாம் எழுத்தினை.

      (6) ஓரெழுத்தும் ஒன்றாது வருக்கம் நெடில் இனம் பற்றி வருவது
கடையாகெதுகை எனக் கொள்க.

      (7) முதலெழுத்து ஒன்றே ஒன்றி வருவதுஇடையாகுமோனை.

      (8) வருக்க முதலிய மோனைகள் கடையாகு மோனை.