| 17வடியமை யெஃகம் வலவயி னேந்தித் தனியே வருதி 18 நீயெனின் மையிருங் கூந்த லுய்தலோ வரிதே.' |
இஃது இரண்டாமெழுத் தொன்றாதாயினும் இரண்டாமெழுத் தின்மேலேறிய உயிர் ஒன்றி வந்தமையால் உயிரெதுகை. இது கையனார் காட்டிய பாட்டு.
இனி ஆசெதுகைக்குச் சொல்லுமாறு : |
| 'யரலழ வென்னு மீரிரண் டொற்றும் வரன்முறை பிறழாது வந்திடை 19 யுயிர்ப்பினஃ தாசிடை யெதுகையென் 20 றறையல் வேண்டும்' |
என்றார்21 ஆகலின். |
வரலாறு |
காப்பியக் கலித்துறை |
| (9) 'காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப் பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென் றிசையாற் றிசைபோய துண்டே' (சீவக. 31) இது யகரவொற்று இடைவந்த (10) ஆசெதுகை. |
கலிவிருத்தம் |
| (11) 'மாக்கொடி 22மாணையு மவ்வற் பந்தருங் கார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகைப் பூங்கொடிப் பொதும்பரும் 23பொன்ன ஞாழலுந் தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொத்ததே.' |
(சூளா. நாட்டு. 29) |
இது ரகர வொற்று இடைவந்த ஆசெதுகை. |
|
(9) காய் மாண்ட - காய் மாட்சியமைப்பட்ட. நெற்றி - உச்சி. தொடை - தேனிறால். வருக்கை - பலாப்பழம். (10) ஆசிடையிட்ட இருகுற ணேரிசை வெண்பாவிற் கூறப்படும் ஆசு வேறு; இங்கே கூறப்படும் ஆசு வேறு. அது பற்றாசு போன்ற ஒன்றும் இரண்டுமாகிய அசைகள். இது ய ர ல வ ழ ஒற்றுக்கள். (11) மாணை - ஒருவகைப் பூங்கொடி. |
|
(பி - ம்.) 17. வடிவமை. 18. நீயென. 19. யுயிர்ப்பி னாசிடை. 20. றறியல் வேண்டும், றறிந்தனர் கொளலே. 21. கையனார். 22. யானையு. மாலையு. 23. புன்னை, கானன். |