வெண்பா |
| 'ஆவே றுருவின வாயினு மாபயந்த பால்வே றுருவின வல்லவாம் - பால்போல் ஒருதன்மைத் தாகு மறநெறி யாபோல் உருவு பலகொள லீங்கு.' |
(நாலடி, 118) |
இது லகரவொற்று இடைவந்த ஆசெதுகை. |
வெண்பா |
| '(12) அந்தரத் துள்ளே யகங்கை புறங்கையா மந்திரமே போலு மனைவாழ்க்கை - 24யந்தரத்து வாழ்கின்றே மென்று மகிழன்மின் வாணாளும் போகின்ற 25பூளையே போன்று. |
இது ழகரவொற்று இடைவந்த ஆசெதுகை. |
| 'ஆர்கலி யுலகத்து.........முடைமை' |
(கா. 26. மேற்) |
இது ரகர வொற்று இடைவந்த வல்லின வெதுகை. இனி இடையிட்டெதுகை வருமாறு : |
ஆசிரியப்பா |
| 'தோடா ரெல்வளை நெகிழ நாளும் நெய்த லுண்கண் பைதல் கலுழ வாடா வவ்வரி புதைஇப் பசலையும் வைக றோறும் பையப் பெருகின நீடா 26ரிவணெண நீமனங் கொண்டார் கேளார் கொல்லோ காதலந் தோழி வாடாப் பௌவ மறமுகந் தெழிலி பருவம் 27பொய்யாது வலனேர்பு வளைஇ ஓடா மலையன் வேலிற் கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே.' |
இஃது அடையிடையிட்டு இரண்டாமெழுத்து ஒன்றி வந்தமை |
|
(12) மந்திரம் - மாயம். அம் தரத்து - அழகிய பதவியில். பூளை - பூளைப் பஞ்சு. வாழ்நாளும் போகின்ற. |
|
(பி - ம்.) 24. மந்தரத்துள். 25. பூளைபோற் பூத்து. 26. ரிவரென நீ மனங்கொண்டார், ரிவணேநீ மனங்கொண்டோர். 27. செய்து |