யால் இடையிட்டெதுகை. இது 28 தொல்காப்பியனார் காட்டிய பாட்டு. |
| 'தாஅ வண்ணம். இடையிட்டு வந்த வெதுகைத் தாகும்' |
(தொல். பொருள், 527.) |
என்றார் ஆகலின். |
இனி இரண்டடி எதுகை வருமாறு : |
இன்னிசை வெண்பா |
| '(13) துவைக்குந் துளிமுன்னீர்க் கொற்கை மகளிர் அவைப்பதம் 29பல்லுக் கழகொவ்வா முத்தம் மணங்கமழ்தா ரச்சுதன் மண்காக்கும் வேலின் 30அணங்கமுத மந்நலார் பாட்டு. |
இது முதலிரண்டடியும் ஓரெதுகையாய்ப் பின்பிரண்டடியும் மற்றோர் எதுகையாய் வந்தமையால் இரண்டடி யெதுகை. |
| 'இரண்டடி யெதுகை திரண்டொருங் கியன்றபின் முரண்ட வெதுகையு 31 மிரண்டினுள் வரையார்' |
என்றார் ஆகலின். |
மோனைக்கும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. 'ஒன்றின முடித்த றன்னின 32முடித்தல்' என்பது தந்திர வுத்தி ஆகலின். |
வரலாறு |
கலிவிருத்தம் |
| '(14) ஆகங் கண்டகத் தாலற்ற வாடவர் ஆகங் கண்டகத் தாலற்ற வன்பினர் |
|
(13) அச்சுதல் - அச்சுதநந்தி ; இவனைப்பற்றி யா. வி. உரையின் சில பாடல்கள் வந்துள்ளன. 'அணங்கு மமுதமு மந்நலார் பாடல்' என்ற பாடத்தைக் கொண்டால் இது கலிவிருத்தம். (14) ஆகம் கண்டகத்தால் அற்ற ஆடவர் - தம் உடல்கள் கத்தியால் அற்று விழுந்த வீரர்களின். ஆகம்கண்டு - உடலைக் கண்டு. அற்ற அன்பினர் - தம் |
|
(பி - ம்.) 28. கையனார். 29. பல்லினழ. 30. அணங்குமமுதமு.... பாடல், 31. மிரண்டல. 32. முடித்தலென், றின்ன வகையான் யாவையு முடியும் என்றார் ஆகலின். |