168

யாப்பருங்கலக் காரிகை

 
பாகங் கொண்டு பயோதரஞ் சேர்த்தினார்
பாகங் கொண்டு பயோதர நண்ணினார்.'
 
      இது முதலிரண்டடியும் ஒரு மோனையாய்ப் பின்னிரண்டடியும் மற்றொரு
மோனையாய் வந்தமையால் இரண்டடி மோனை எனக் கொள்க.

      இனி மூன்றாமெழுத் தொன்றெதுகை வருமாறு :
 
  'பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.'

(குறள், 292.)

  'பவழமும் பொன்னுங் குவைஇய முந்தின்
திகழரும் பீன்றன புன்னை.'
 
     இவை மூன்றாமெழழுத்தொன் றெதுகை.
 
     'நிரக்கு மெதுகை' என்று சிறப்பித்தவதனால் விட்டிசை வல்லொற்றெதுகை
என்றும், விட்டிசை மோனை என்றும் வேண்டுவாரும் உளரெனக் கொள்க.
 

வரலாறு

குறள் வெண்பா

  'பற்றிப் பலகாலும் பான்மறி யுண்ணாமை
நொஅலைய னின்னாட்டை நீ.'
 
     இது வல்லொற்று அடுத்தாற்போல விட்டிசைத்த 33குற் றெழுத்தோடு
புணர்த்தமையால் விட்டிசை வல்லொற் றெதுகை.

      ['அ அவனும் இ இவனும் உ உவனுங் கூடியக்கால் எ எவனை வெல்லா ரிகல்.'

      இது முதலெழுத்து விட்டிசைத்து வந்தமையால் விட்டிசை மோனை.]

      இவை எல்லாஞ் சிறப்பிலவெனக் கொள்க.
 

     உயிர்மேல் அன்பற்ற மனைவிமார். பாகம் கொண் - தம் கணவரின் உடலைத்
தழுவி. பயோதரம் - முலை. பயோதரம் நண்ணினார் - மேக மண்டலத்தை
அடைந்தனர்; இறந்தார் என்றபடி. இது தலையொடு முடிதல் என்னும் துறை.
 

     (பி - ம்.) 33. குற்றெழுத்துக் குற்றெழுத்தினோடு வந்தமையால்.