ஒழிபியல் ' வருக்க நெடிலினம் '

169

 
     இன்னும் 'ஒருக்கப் பெயரால் ' என்று சிறப்பித்தவதனால் பாவினங்கள் எல்லாத்
தொடையானும் வரும் என்றார் ஆயினும் பெரும்பான்மையும் தலையாகு மோனையிற்
றிரிந்தும் தலையா கெதுகையிற் றிரிந்தும் வாராவென்றும், செந்தொடை யொழிந்த
எல்லாத் தொடைக்கும் இனவெழுத்து வரத் தொடுப்பதூஉம் (15) வழியெதுகை
வரத்தொடுப்பதூஉம் வழிமுரண் வரத் தொடுப்பதூஉம் சிறப்புடைத்து என்றும் கொள்க.

     இனவெழுத்துப் பெற்று மோனை முதலாகிய தொடையும் தொடை விகற்பமும்
போலாது வேறுபடத் தொடுப்பது மருட் செந்தொடை யெனப்படும் என்றவாறு.
 
     இனவெழுத்து வருமாறு :

     தானமொத்த குறிலும் நெடிலும் தம்முள் இனமாம். அகர ஆகார ஐகார
ஒளகாரங்கள் தம்முள் இனமாம். இகர ஈகார எகர ஏகாரங்கள் தம்முள் இனமாம். உகர
ஊகார ஒகர ஓகாரங்கள் தம்முள் இனமாம். உயிர்மெய்க்கும் இவ்வாறே ஒட்டிக்கொள்க.

     ஒற்றினுள், சகர தகரங்கள் தம்முள் இனமாம். ஞகர நகரங்கள் தம்முள் இனமாம்.
மகர வகரங்கள் தம்முள் இனமாம்.

     இவை அனுவென்றும் வழங்கப்படும். என்னை?
 
  'அகரமோ டாகார மைகார மௌவாம்
இகரமோ டீகாரம் எஏ - உகரமோ
டூகாரம் ஒஓ ஞநமவ தச்சகரம்
ஆகாத வல்ல வனு'
 
என்றார் 34 ஆகலின்
 
     [இவற்றுள் இலக்கியம் மேற்காட்டியவற்றுள்ளும் பிறவற்றுள்ளும் கண்டுகொள்க.]
 

     (15) வழியெதுகையாவது ஓரடியிற் பலசீர் எதுகையாக வருதல் ; உ - ம்.
'கன்னியம் புன்னை யின்னிழற் றுன்னிய'. வழியெதுகையுள் பொழிப்பெதுகை வருதல்
அகவற்குச் சிறப்பு.
 

     (பி - ம்.) 34. காக்கை பாடினியார்,