உறுப்பியல் 'குறினெடிலாவி'

17

 
'தனிநிலை முதனிலை யிடைநிலை யீறென
நால்வகைப் படூஉமள பாய்வரு மிடனே'
 
என்றார் ஆகலின்.
 

வரலாறு

     ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ எனத் தனிநிலை யளபெடை வந்தவாறு.
 
     ஆஅலமரம், ஈஇரிலை, ஊஉரிடம், ஏஎரிகள், ஐஇயவி, ஓஒரிகள், ஒளஉவியம் என
முதனிலை யளபெடை வந்தவாறு.
 
     படாஅகை, பரீஇகம், கழூஉமணி, பரேஎரம், வளைஇயம், புரோஓசை, அநௌஉகம்
என இடைநிலை அளபெடை வந்தவாறு.
 
     கடாஅ, குரீஇ, கழூஉ, மிலேஎ, கடைஇ, அரோஒ, அரௌஉ என இறுதிநிலை
யளபெடை வந்தவாறு.
 
     உயிரளபெடை எழுத்து நோக்க ஏழாம், இடம்நோக்க நான்காம், எழுத்தும்
இடமும் உறழ்ந்து நோக்க (19) இருபத்தெட்டாம் எனக் கொள்க.
 
இனி ஒற்றளபெடைக்குச் சொல்லுமாறு:
 
     ஒற்றுக்களுள், ங ஞ ண ந ம ன வ ய ல ள வாய்தம் என்னும் பதினோரொற்றும்
குறிற்கீழும் குறிலிணைக் கீழும் வந்து அளபெடுக் கும் எனக் கொள்க. என்னை?
 
  'ஙஞண நமன வயலள வாய்தம்
எனுமிவை யீரிடத் தளபெழு மொரோவழி'

'வன்மையொடு ரஃகான் ழஃகா னொழித்தாங்
கன்மெய் யாய்தமோ டளபெழு மொரோவழி'
 
என்றார் ஆகலின்.
 

வரலாறு

     மங்ங்கலம், பஞ்ஞ்சு, மண்ண்ணு, பந்ந்து, அம்ம்பு, மின்ன்னு, தெவ்வ்வர்,
வெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு என இவை குறிற்கீழ்ப் பதினோ ரொற்றும்
அளபெழுந்தவாறு.

     அரங்ங்கம், முரஞ்ஞ்சு, மருண்ண்டு, பருந்ந்து, அரும்ம்பு,
 

     (19) நன்னூலார் உயிரளபெடை இருபத்தொன்று என்பர் ; சூ. 61. கா.