அவற்றுள் சில வருமாறு: |
| 'ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்.' |
(குறள். 228) |
| 'அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்ள் சிறுகை யளாவிய கூழ்.' |
(குறள், 64.) |
இவை இனவெழுத்துப் பெற்று மோனை முதலாகிய தொடையும் தொடை விகற்பமும் போலாமை வேறுபடத் தொடுத்தமையால் மருட் செந்தொடை.
இனி வழியெதுகைக்குச் சொல்லுமாறு : |
கட்டளைக் கலித்துறை |
| '(16) மண்டலம் பண்டுண்ட திண்டேர் வரகுணன் றொண்டியின்வாய்க் கண்டிலந் தண்டுறைக் கண்டதொன் றுண்டு 35கனமகர குண்டலங் கெண்டை யிரண்டொடு தொண்டையுங் கொண்டொர்திங்கள் மண்டலம் வண்டலம் பக்கொண்ட றாழ வருகின்றதே' |
எனவும், 'கொங்கு தங்கு கோதை யோதி' (கா. 13, மேற்.) எனவும் கொள்க. அனுப்பிராச மென்னும் வடமொழியை வழி யெதுகை என்பது தமிழ் வழக்கெனக் கொள்க. இனி வழிமுரண் வருமாறு : வழிமுரணி வருவன வழிமுரண் என்று வழங்கப்படும். |
விருத்தம் |
| 'செய்யவாய்ப் பசும்பொன் னோலைச் சீறடிப் பரவை யல்குல் ஐயநுண் மருங்கு னோவ வடிக்கொண்ட குவவுக் கொங்கை வெய்யவாய்த் தண்ணெ னீலம் விரிந்தென விலங்கி நீண்ட மையவா மழைக்கட் கூந்தன் மகளிரை வருக வென்றான்' |
(சூளா. சீய. 101.) |
எனவும். |
|
(16) தொண்டி - சோழ நாட்டுத் துறைமுகத்து ளொன்று. கண்டல் - தாழை. கெண்டை என்றது கண்களை. தொண்டை - ஆதொண்டைக் கனி; இது வாய்க்கு உவமை. வண்டு அலம்ப ; அலம்ப - ஒலிப்ப. கொண்டல் என்றது கூந்தலை. |
|
(பி - ம்.) 35. கனவயிரக் |