கட்டளைக் கலித்துறை |
| `ஒருமால் வரைநின் றிருசுட ரோட்டிமுந் நீர்க்கிடந்த பெருமா நிலனுஞ் சிறுவிலைத் தாவுண்டு பேதையர்கண் பொருமா தவித்தொங்க 36லெங்கோன்போர் வல்லவன் பூம்பொதியிற் கருமா விழிவெண்பற் செவ்வாய்ப் பசும்பொற் கனங்குழைக்கே.ழு |
எனவும் கொள்க.
மோனை எதுகையிற் றிரிந்து பாவும் இனமும் வாராமை மேற் காட்டியவற்றுள்ளும் பிறவற்றுள்ளும் கண்டுகொள்க.
`நேரிழையேழு என்பது மகடூஉ முன்னிலை. |
(6) |
|
(பி - ம்.) 36 லெங்கோன் புரவலன். |
தரவு தாழிசைகட்கு அடிவரையறை |
| 42. சுருங்கிற்று மூன்றடி யேனைத் தரவிரு மூன்றடியே தரங்கக்கும் வண்ணகக் குந்தர வாவது தாழிசைப்பாச் சுருங்கிற் றிரண்டடி 1யோக்க மிரட்டி 2சுரும்பிமிரும் தாங்கக் குழலாய் சுருங்குத் தரவினிற் றாழிசையே. |
இ - கை தரவு தாழிசைகட்கு அடியளவு ஆமாறு உணர்த்.....று. `சுருங்கிற்று மூன்றடி ஏனைத்தரவுழு எ - து. அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பாவும் வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவும் ஒழித்து அல்லாத கலிப்பாவின் தரவிற்கு மூன்றடிச் சிறுமை எ - று. |
பெருமை பாடுவோனது பொருள் முடிவு குறிப்பே. வரையறை இல்லை எனக் கொள்க. `இரு மூன்றடியே தரங்கக்கும் வண்ணகக்கும் தரவாவதுழு எ - து. அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பாவுக்கும் வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவுக்கும் பெருக்கம் சுருக்கம் இல்லை. ஆறடியே தரவாவது எ - று. |
|
(பி - ம்.) 1. யோங்கலிரட்டி. 2. சுரும்பிருந்த. சுரும்பிவரும். |