172

யாப்பருங்கலக் காரிகை

 
     'சுருங்கிற்று மூன்றடி யேனைத் தரவு' என்றாராயினும், கலிப்பாவுக்கு நான்கடியே
சிறுமை என்று 'வெள்ளைக் கிரண்டடி' என்னும் காரிகையிற் (கா. 14) சொன்னமையால்
தரவு கொச்சகக் கலிப்பாவுக்கு நான்கடியே சிறுமை எ - று.

     'தாழிசைப்பாச் சுருங்கிற் றிரண்டடி 3 ஓக்கம் இரட்டி' எ - து. பொதுவகையாற்
றாழிசை சொல்லிப் போந்தாராயினும். தாழிசைக்கு இரண்டடிச் சிறுமை, பெருமை
நான்கடி, இடை மூன்றடியாய் வருவதெனக் கொள்க.
 
     'சுருங்கும் தரவினில் தாழிசையே' எ - து. தரவடியிற் றாழிசையடி சுருங்கி வரும்
எ-று.

     இவற்றுக்கு இலக்கியம் மேற்காட்டியவற்றுள்ளும் பிறவற் றுள்ளுங் கண்டுகொள்க.

     4 சுரும்பு இமிரும் தரங்கக் குழலாய்' எ - து, மகடூஉ முன்னிலை.
 

 (7)


     (பி - ம்.) 3. யோங்கலிரட்டி. 4. சுரும்பிவரும், சுரும்பிருந்த.
 

பாக்களுக்குரிய சில இயல்புகள்

  43. பொருளோ டடிமுத னிற்பது 1கூனது வேபொருந்தி
இருள்சேர் 2விலாவஞ்சி யீற்றினு நிற்கு மினியொழிந்த
மருடீர் விகாரம் வகையுளி வாழ்த்து வசைவனப்புப்
பொருள்கோள் குறிப்பிசை யொப்புங் குறிக்கொள் பொலங் கொடியே
 
     இ - கை மேற் சொல்லப்பட்ட பாக்கட்கு எல்லாம் எய்தியதோர் இலக்கணம்
உணர்த்..று.
 

கூன்

     'பொருளோடு அடிமுதல் நிற்பது கூன்' எ - து. அடி முதற்கண் பாவினது
பொருளைத் தழுவித் தனியே நிற்பது கூன் எனப்படும்  எ - று.

      'அதுவே பொருந்தி இருள் 3சேர்விலா வஞ்சி ஈற்றினும் நிற்கும்' எ - து
அக்கூன் வஞ்சிப்பாவின் ஈற்றினும் நிற்கும் எ - று.
 

     (பி - ம்.) 1. கூனடுவே. 2. பிலாவஞ்சி. 3. சேர்பிலா.