ஒழிபியல் 'பொருளோ டடிமுத'

173

 
     'ஈற்றினும் நிற்கும்' என்ற உம்மையால் வஞ்சிப்பாவில் 4 நடுவினும் கூன்
வரப்பெறும் எ - று.
 
     'இருள் சேர்விலா வஞ்சி' என்று சிறப்பித்தவதனால், வஞ்சியடியின் நடுவும்
இறுதியும் அசை கூனாய் வருவது சிறப்புடைத்து. சீர் கூனாய் வரினும் உகர மீறாகிய
நேரீற்று இயற் சீராய் அல்லது வாராவெனக் கொள்க. கொச்சகக் கலியுள் ஓரடி கூனாய்
வரினும் சிறப்பினவாம். ஆசிரியப்பாவிற்கு இடையிலே வருதலின்றி அதன் ஈற்றினும்,
வெண்பா கலி என்னும் இவற்றின் இடையினும் ஈற்றினும் கூன் வரப்பெறாதெனக்
கொள்க. என்னை?
 
'அடிமுதற் பொருளைத் தானினிது 5கொண்டு
முடிய நிற்பது கூனென மொழிப'

'வஞ்சியி னிறுதியு மாகு மதுவே'

'அசைகூ னாகு மென்மனார் புலவர்'
என்றார் பல்காயனார்.

     கூனைத் தனிச்சொல் என்பாரும் உளர்.
 
  'அடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொலஃ
திறுதியும் வஞ்சியு ளியலு மென்ப.'
என்றார் ஆகலின். (யா. வி. சூ. 94.)
 

வரலாறு

நேரிசை வெண்பா

'உதுக்காண்,

'சுரந்தானா வண்கைச் 6சுவணமாப் பூதன்
பரந்தானாப் பல்புகழ் பாடி - யிரந்தார்மாட்
டின்மை யகல்வது போல விருணீங்க
7 மின்னு 8மளித்தேர் மழை.
 
     இவ்வெண்பாவின் அடிமுதற்கண் 'உதுக்காண்' எனக் கூன் வந்தவாறு
கண்டுகொள்க:
 

     (பி - ம்.) 4. முதல் இடை கடை என்னும் மூன்றிடத்தும் கூன் 5. தழுவி.
6. சுவர்னமாப், சுவாணமாப், சுமானமாப். 7. மன்னு 8. மளிதேர்.