நேரிசை யாசிரியப்பா |
| '(1) அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே. யானே, தோடா ரெல்வளை நெகிழ வேங்கிப் பாடமை சேக்கையுட் படர்கூர்ந் திசினே அன்ன ளளிய ளென்னாது மாமழை இன்னும் பெய்ய முழங்கி மின்னுந் தோழியென் னின்னுயிர் குறித்தே.' |
(குறுந். 216.) |
இவ்வாசிரியத்துள் அடி முதற்கண் 'அவரே' எனவும் இடைக்கண், யானே' எனவும் சீர் கூனாய் வந்தவாறு கண்டு கொள்க. |
கொச்சகக் கலிப்பா |
| (2) 'உலகினுட், பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும் இருந்தகைய விறுவரைமே லெரிபோலச் சுடர்விடுமே சிறுதகையார் சிறுதகைமை சிறப்பெனினும் பிறழ்வின்றி உறுதகைமை யுலகிற்கோ ரொப்பாகித் தோன்றாவே.' |
இக்கலிப்பாவினுள் அடிமுதற்கண் 'உலகினுள்' எனச் சீர் கூனாய் வந்தவாறு கண்டுகொள்க. |
| 'உலகே, முற்கொடுத்தார் பிற்கொளவும் பிற்கொடுத்தார் முற்கொளவும் உறுதிவழி யொழுகுமென்ப அதனால் நற்றிற நாடுத னன்மை பற்றற யாவையும் பரிவறத் துறந்தே' |
|
(1) தருமார் - கொணரும்பொருட்டு. வள்ளி - வள்ளிக்கொடி. இறந்தோர் - கடந்து சென்றவர். தோடு ஆர் எல்வளை - தொகுதி பொருந்திய விளக்கத்தை யுடைய வளையல்கள். பாடு அமை -படுத்தல் அமைந்த. சேக்கை - படுக்கை. படர்கூர்ந்திசின் - துன்பம் மிக்கேன் (2) இறு வரை - பெரிய மலை. ஒப்பு ஆகி - உலகம் ஏற்றுக் கொள்வதாகி. |