| 'தண்டையி னினக்கிளி கடிவோள் பண்டைய ளல்லண் மானோக் கினளே.' |
இதனுள் (3) தட்டையெனற்பாலதனைந் தண்டையென்று மெலிக்கும் வழி மெலித்தவாறு. |
இன்னிசை வெண்பா |
| '(4) வெண்மண லெக்கர் விரிதிரை தந்தநீர் கண்ணாடி மண்டிலத் தூதாவி யொத்திழியுந் தண்ணந் துறைவர் தகவிலரே தற்சேர்ந்தார் வண்ணங் கடைப்பிடியா தார்.' |
இதனுள் 'தண்டுறைவர்' எனற்பாலதனைத் 'தண்ணந்துறைவர்' என்று விரிக்கும் வழி விரித்தவாறு. |
நேரிசை வெண்பா |
| 'பூத்தாட் புறவின் 9புனைமதில் கைவிடார் காத்தலிற் காமுறுவ 10ரேனையர் - பார்த்துறார் வேண்டார் வணங்கி விறன்மதி றான்கோடல் வேண்டுமாம் வேண்டார் மகன்.' |
இதனுள் 'வேண்டாதாரை வணக்கி' எனற்பாலதனை 'வேண்டார் வணக்கி' என்று தொகுக்கும் வழித் தொகுத்தவாறு. |
நேரிசை வெண்பா |
| ' (5) பாசிழை யாகம் பசப்பித்தான் 11பைந்தொடீஇ மாசேன னென்று மனங்கொளீஇ - மாசேனன் சேயிதழ்க் கண்ணி தருதலாற் சேர்த்தியென் நோய்தீர நெஞ்சின்மேல் வைத்து.' |
இதனுன் 'பச்சிழை' எனற்பாலதனைப் 'பாசிழை' என்று நீட்டும் வழி நீட்டியவாறு. |
|
(3) தட்டை - கிளி கடி கருவி. (4) கண்ணாடியில் ஊதும் ஆவி : 'தெள்ளற வியற்றிய நிழல் காண் மண்டிலத், துள்ளூதாவியிற் பைப்பய நுணுகி' (அகநா. 71: 13-4.) (5) பாசிழை என்பது பண்பின் விகாரமே ஒழியச் செய்யுள் விகாரம் அன்றென்பர் பலர். |
|
(பி - ம்.) 9. புனைமலர் கைவிட்டார், காத்தவிக் காதல ரேனையர்;புனைமதில் கைவிட்டார். 10. ரேழையார், 11. பைந்தொடி. |