| யானை, யெருத்தத் திருந்த விலங்கிலைவேற் றென்னன் றிருந்தார்நன் றென்றேன் றியேன். |
(கா. 24, மேற்.) |
இதனுள் 'தீயேன்' எனற்பாலதனைத் 'தியேன்' என்று குறுக்கும் வழிக் குறுக்கியவாறு. 'மருடீர் விகாரம்' என்று சிறப்பித்தவதனால் வரலாற்று முறை மையோடுங் கூட்டி வழங்கி வாரா நின்றவை அல்லது (6) 13துவைக்குப் பாலில்லை எனற்பாலதனைத் 'தூவைக்குப் பாலில்லை' என்றார்போலப் புணர்க்கப்படா வெனக் கொள்க. இன்னும் 'மருடீர் விகாரம்' என்று சிறப்பித்தவதனால் (7) தலைக்குறைத்தலும், இடைக்குறைத்தலும், கடைக்குறைத்தலும் என இவையும் 14வரலாற்று ழுறைமையோடுங் கூட்டி வழங்கப்படும் எ - று. |
வரலாறு |
| 'மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி.' |
இதனுள் 'தாமரை' எனற்பாலதனை 'மரை' என்று தலைக் குறைத்து வழங்கினவாறு. |
| 'வேதின வெரிநி னோதி முதுபோத்து.' |
(குறுந். 140) |
இதனுள் 'ஓந்தி' எனற்பாலதனை 'ஓதி' என்று இடைக் குறைத்து வழங்கினவாறு. |
| 'அகலிரு விசும்பி னாஅல் போல வாலிதின் மலர்ந்த புன்கொடி முசுண்டை.' |
(மலைபடு. 100-101.) |
இதனுள் (8) 'ஆரல்' எனற்பாலதனை 'ஆல்' என்று இடைக் குறைத்தது. |
|
(6) துவை - இறைச்சி. (7) இவை முறையே முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை எனப்படும். (8) ஆரல் - கார்த்திகை மீன். |
|
(பி - ம்.) 13. தன்னவ்வைக்குப் பாலில்லை எனற்பாலதனைத் தனவைக்குப் 14. விகாரமென்று வருவனவுமுள எ - று. |