ஒழிபியல் 'பொருளோ டடிமுத'

179

 
     ஆகற்பாலது இயற்சீராய், 'நிகரில் வெள்ளைக்கு ஓரசைச் சீரும் ஒளிசேர் பிறப்பும்
ஒண் காசு மிற்ற சீருடைச் சிந்தடியே முடிவாம் (கா. 25.) என்னும் இலக்கணத்தோடு
மாறுகொள்ளும் ஆதலின் இதனை 'நீடுவாழ்' என்று கூவிளமாகவும் 'வார்' என்று நாள்
என்னும் நேரசைச் சீராகவும் அலகிடத் தளையும் வண்ணமுஞ் சிதையாவாம்.
 

(3) வாழ்த்து

     வாழ்த்து இரண்டு வகைப்படும், மெய் வாழ்த்தும் இருபுற வாழ்த்தும் என.
 

வரலாறு

நேரிசை வெண்பா

'(11) கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற 18தவங்கொலோ - கூர்நுனைவேல்
19வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற்
கொண்டிருக்கப் பெற்ற குணம்.'

(முத்தொள்.)

இது மெய் வாழ்த்து.
 

நேரிசை வெண்பா

  'பண்டு மொருகாற்றன் பைந்தொடியைக் கேரட்பட்டு
வெங்கடத்து வில்லேற்றிக் கொண்டுழந்தான் - தென்களந்தைப்
20பூமான் றிருமகளுக் கின்னும் புலம்புமால்
வாமான்றேர் வையையார் கோ.'
 
இது (12) இருபுற வாழ்த்து.
 

(4) வசை.

     வசை இரண்டு வகைப்படும், மெய் வசையும் இருபுற வசையும் என.
 


     (11) நீலம் - குவளை. நக்கதார் - மலர்ந்த மாலை, நீலம் கொண்டிருக்கப் பெற்ற
குணம் தவம்கொலோ.

      (12) இருபுற வாழ்த்து - வாழ்த்துப்போன்ற வசை. வாழ்த் தென்பது
 பெருமையைக் கூறுவது.
 

     (பி - ம்.) 18. பயன்கொலோ. 19. வண்டிருக்குந் தார்மார்பன். 20. பூ மாண்டிரு.