முரன்ன்று, (20) குரவ்வ்வை, அரைய்ய்யர், குரல்ல்கள், திரள்ள்கள், வரஃஃகு என இவை பதினோ ரொற்றும் குறிலிணைக் கீழ் அளபெழுந்தவாறு. | (21) இவ்விருபத்திரண்டு புள்ளி யளபெடையும் செய்யு ளிடத்து அரிதாகவல்லது (22) பரவை வழக்கினுள் வாராவெனக் கொள்க. என்னை? | | மாத்திரை வகையாற் 14 றளைதம கெடாநிலை யாப்பழி யாமையென் றளபெடை வேண்டும்' | என்றார் ஆகலின், | 'அறிஞர் உரைத்த அளபும்' என்று சிறப்பித்த வதனாற் குற்றெழுத்து ஒரு மாத்திரை, நெட்டெழுத்து இரண்டு மாத்திரை, உயிரளபெடை மூன்று மாத்திரை, ஆய்தமும் மெய்யும் குற்றிய லிகரமும் குற்றியலுகரமும் ஓரோவொன்று அரைமாத்திரை, ஐகாரக் குறுக்கமும் (23) ஒளகாரக் குறுக்கமும் ஒரோவொன்று ஒன்றரை மாத்திரை, ஒற்றளபெடை ஒரு மாத்திரை, ஆய்தக் குறுக்கமும் மகரக் குறுக்கமும் ஒரோ வொன்று கான்மாத்திரை எனக் கொள்க. | | 'ஒன்றிரண் டொருமூன் றொன்றரை யரைகால் என்றனர் பொழுதிவை யிமைநொடி யளவே' 'கண்ணிமை 15 நொடியென வவ்வே மாத்திரை நுண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே' | (தொல். எழுத். சூ. 7) |
| (20) இதன்பின், 'குரவை என்ற வழி ஒற்றும் வரகு என்புழி ஆய்தமும் இலவெனினும் செய்யுட்கண் ஓசைகெட்டுழி வருவித்துக் கொள்ளுக' என்ற தொடர் ஒரு பிரதியிற் காணப்படுகிறது.(21) நன்னூலார் புள்ளியளபெடை நாற்பத்திரண்டு என்பர்; சூ.61. (22) பரவை வழக்கு - பரந்துபட்ட வழக்கு; என்றது உலக வழக்கை. (23) காரிகையில் சொல்லப்படாத ஒளகாரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம், மரகக் குறுக்கங்களுக்கு இங்கே மாத்திரை கூறியது ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல்' என்னும் உத்தியாலென்க. யாப்பருங்கலத்தில் இவை மூன்றினையும் கூட்டி ஆசிரியர் அசைக்கு உறுப்பாம் எழுத்துப் பதினைந்து என்பர். காரிகையில் கூறப்படுவன பதின்மூன்றே. |
| (பி - ம்.) 14. றளைதப. 15. கைந்நொடி யளவே. | |
|
|