180

யாப்பருங்கலக் காரிகை

 

வரலாறு

நேரிசைவெண்பா

' (13) தந்தை யிலைச்சுமடன் 21றாய்தொழிலி தான்பார்ப்பான்
எந்தைக்கி தெங்ஙனம் பட்டதுகொல் - முந்தை
அவியுணவி னார்தெரியி னாவதாங் கொல்லோ
கவிகண்ண னார்தம் பிறப்பு.'
 
இது மெய் வசை.
 
  ' (4) படையொடு போகாது நின்றெறிந்தா னென்றும்
கொடையொடு நல்லார்கட் டாழ்ந்தான் - படையொடு
பாடி வழங்குந் தெருவெல்லாந் தான்சென்று
கோடி வழங்கு மகன்.'
 
இஃது இருபுற வசை.
 

(5) வனப்பு

     வனப்பு எட்டு வகைப்படும், அம்மை அழகு தொன்மை தோல் விருந்து இயைபு
புலன் இழைபு என. அவற்றுள்,

      அம்மையென்பது (15) சிலவாய மெல்லியவாகிய சொற்களால் ஒள்ளியவாகிய
பொருண்மேற் சிலவடியாற் சொல்லப்படுவது. என்னை?
 

  '(16) சின்மென் மொழியாற் சீர்புனைந் தியாப்பின்
அம்மை தானே யடிநிமிர் வின்றே'
 
என்றார் ஆகலின்.
 

     (13) இலைச்சுமடன் - இலைகளைச் சுமந்து சென்று விற்பவன். தொழிலி -
வேலைக்காரி. அவியுணவினார் - தேவர்.

      (14) இருபுறவசை - வசை போன்ற வாழ்த்து. நின்றெறிதலும், தாழ்தலும்,
தெருவெல்லாம் செல்லுதலும் இங்கே வசைபோன்று புகழாயிற்று.

      (15) கீழ்க்கணக்கு நூல்கள் நீதிநூல் போன்றவை அம்மையின் பாற்படும்.

      (16) வனப்பு என்ற தலைப்பின் கீழ் இந்நூலுள் காணப்படும் சூத்திரங்கள் தொல்.
பொருள், செய்யுளியலிற் காணப்படும் சூத்திரங்களோடு பொருளில் ஒன்றியும்
சொல்லமைப்பில் வேறுபட்டும் காணப்படுகின்றன.
 

     (பி - ம்.) 21. றாய்தோழி.