ஒழிபியல் 'பொருளோ டடிமுத'

181

 

வரலாறு

  'அறிவினா லாகுவ துண்டோ பிறிதினோய்
தன்னோய்போற் போற்றாக் கடை'

(குறள், 315.)
 

எனக் கொள்க.
 
     (17) அழகென்பது - செய்யுட் சொல்லாகிய திரி சொற்களால் ஓசை
இனியவையாகப் புணர்க்கப்படுவது. என்னை?
 
'செய்யுண் மொழியாற் சீர்புனைந் தியாப்பின்
அவ்வகை தானே யழகெனப் படுமே'
என்றார் ஆகலின்.
 

வரலாறு

நேரிசை யாசிரியப்பா

'(18) துணியிரும் பௌவங் குறைய வாங்கி
அணிகிள ரடுக்கன் முற்றிய வெழிலி
காலொடு மயங்கிய கனையிரு ணடுநாள்
யாங்குவந் தனையோ வோங்கல் வெற்ப
நெடுவரை மருங்கிற் 22 பாம்புற விழிதருங்
கடுவரற் கலுழி நீந்தி
வல்லியம் வழங்குங் கல்லதர் நெறியே'
 
எனக் கொள்க.

      (19) தொன்மை யென்பது பழமைத்தாய் நிகழ்ந்த பெற்றி யுரைக்கப்படும்
அவற்றின் மேற்று. என்னை?
 
  'சுரிகுழன் மடவாய் தொன்மை தானே
யுரையொடு புணர்ந்த பழமை மேற்றே'
 
என்றார் ஆகலின்.
 

     (17) அழகென்பது எட்டுத்தொகை நூல்கள் போன்றது.

      (18) பௌவம் - கடல். எழிலி - மேகம். கலுழி - காட்டாறு. காட்டாற்றுக்குப்
பாம்பு உவமை. வல்லியம் - புலி. கல் அதர் - மலைவழி. வெற்ப நெறி யாங்கு
வந்தனையோ.

      (19) தொன்மை என்பது செய்யுளும் வசனமும் தழுவி வந்த கதை முதலியன.
தகடூர் யாத்திரை, சிலப்பதிகாரம் முதலியன உதாரணமாம்.
 

     (பி - ம்.) 22. பாம்பு பட விழி தருங்.