182

யாப்பருங்கலக் காரிகை

 

வரலாறு

'செறிதொடி யுவகை கேளாய் செஞ்சுடர்த்
தெறுகதிர்ச் செல்வன் செய்வதென்'
 
என்பதூஉம், பாரதம் இராமாயணம் முதலாயினவும் கொள்க.

     'தோல்' என்பது இழுமென மெல்லியவையாகிய சொற்களான் விழுமியவாய்க்
கிடப்பனவும், (20) எல்லாச் சொற்களோடுங் கூடிப் பலவடியும் மயங்கி வந்தனவாய்க்
கிடப்பனவும் என இருதிறத்தனவாம். என்னை?
 
  'இழுமென் மொழியால் விழுமியது நுவவினும்
பரந்த மொழியா னடிநிமிர்ந் தொழுகினுந்
தோலென மொழிப 23தொன்னெறிப் புலவர்'
 
என்றார் ஆகலின்.
 

வரலாறு

நிலைமண்டிலவாசிரியப்பா

  'பாயிரும் பரப்பகம் 24புதையப் பாம்பின்
ஆயிர மணிவிளக் கழலுஞ் சேக்கைத்
25துளிதரு வெள்ளந் துயில்புடை பெயர்க்கும்
ஒளியோன் காஞ்சி யெளிதெனக் கூறின்
இம்மை யில்லை மறுமை யில்லை
நன்மை யில்லை தீமை யில்லை
செய்வோ ரில்லை செய்பொரு ளில்லை
அறிவோர் யாரஃ திறுவழி யிறுகென.'
 
     இது மார்க்கண்டேயனார் காஞ்சி. இஃது இழுமென் மொழியால் விழுமியது
நுவன்றவாறு.

      'திருமலை தலைஇய விருணிற விசும்பின்' என்பது (26மலை படுகடாம்)
பரந்தமொழியால் அடி நிமிர்ந்தொழுகியது.

     (21) விருந்தென்பது புதிய வாயினவற்றின் மேற்று என்னை?
 


     (20) பலவடியும் மயங்கி எல்லாச் சொற்களோடுங் கூடி வருவன பத்துப் பாட்டைப்
போன்றன.

      (21) கலம்பகம் - உலா, தூது, பரணி. பிள்ளைத் தமிழ் முதலிய பிரபந்தங்கள்
விருந்து என்பதற்கு உதாரணமாம்.
 

     (பி - ம்.) 23. தொன்மொழிப். 24. குறையப். 25. துணிதரு 26. கூத்தராற்றுப்படை.