ஒழிபியல் 'பொருளோ டடிமுத'

183

 
  'வெதிர்புரை தோளாய் விருந்து தானே
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே.'
 
     அவை இப்பொழுதுள்ளாரைப் பாடுவன. வந்தவழிக் கண்டு கொள்க.

     இயையென்பது ஞணநமன யரலவழள என்னும் பதினொரு புள்ளியும் ஈறாக வந்த
பாட்டு. என்னை?
  'ஞகார முதலா ளகார லீற்றுப்
புள்ளி யிறுதி யியைபெனப் படுமே'
 
என்றார் ஆகலின் (22) அவை வந்துழிக் கண்டு கொள்க.

     (23) புலன் என்பது இயற் சொல்லாற் பொருள் தோன்றச் சொல்லப்படுவது.
என்னை?
 
27 'தெரிந்த மொழியாற் செவ்வி திற்புணர்ந்த
தோதல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப புலனுணர்ந் தோரே'
 
என்றார் ஆகலின்.
 

வரலாறு

நேரிசை யாசிரியப்பா

'பார்க்கடன் முகந்த பருவக் கொண்மூ
வார்ச்செறி முரசின் முழங்கி யொன்னார்
மலைமுற் றின்றே வயங்குதுளி சிதறிச்
சென்றவ டிருமுகங் காணக் கடுந்தேர்
இன்றுபுகக் கடவுமதி பாக வுதுக்காண்
மாவொடு புணர்ந்த மாஅல் போல
இரும்பிடி யுழைய தாகப்
28பெருங்காடு மடுத்த காமர் களிறே'
எனக் கொள்க.
 

     (22) மணிமேகலையும், பெருங்கதையும் இயைபுக்கு உதாரணம். இயைபு
பொருட்டொடராகவும் சொற்றொடராகவும் செய்யப்படும் பாட்டு.

      (23) புலனுக்கு உதாரணம் சேரிமொழிகள் பயின்று வந்த குறம். குறவஞ்சி
ஏனைய நாடகங்கள், பள்ளு, ஏற்றப்பாட்டு முதலியன.

     (பி - ம்.) 27. சேரிமொழியாற். 28. பெருங்கரமெடுத்த