(24) இழைபு என்பது - வல்லொற்று யாதும் தீண்டாது செய்யுளியலுடையார் எழுத்தெண்ணி அடிவகுக்கப்பட்ட குறளடி முதலாகப் பதினேழ் நிலத்து ஐந்தடியும் முறையானே உடைத்தாய் ஓங்கிய சொற்களான் வருவது. என்னை? |
| 'ஒற்றொரு புணர்ந்த வல்லெழுத் தடக்காது குறளடி முதலா வைந்தடி காறும் ஓங்கிய மொழியா னாங்ஙன மொழியின் இழைபி னிலக்கண மியைந்த தாகும்' |
என்றார் ஆகலின்.
(25) செய்யுளியலுடையார் நாற்சீரடி தன்னையே நாலெழுத்து முதலா ஆறெழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியும் குறளடி என்றும், ஏழெழுத்து முதலா ஒன்ப தெழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியும் சிந்தடி என்றும், பத்தெழுத்து முதலாப் பதினான் கெழுத்தின் காறும் உயர்ந்த ஐந்தடியும் அளவடி என்றும், பதினைந் தெழுத்து முதலாப் பதினேழெழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியும் நெடிலடி என்றும், பதினெட்டெழுத்து முதலா இருபதெழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியும் கழிநெடிலடி என்றும் வேண்டுவர். இருபதெழுத்தின் மிக்க நாற்சீரடிப்பா இல்லை எனக் கொள்க.
எழுத்து எண்ணுகின்றுழிக் குற்றியலுகரமும், குற்றியலிகரமும், ஒற்றும் ஆய்தமும் ஒழிந்த உயிரும் உயிர்மெய்யுங் கூட்டி எண்ணப் படும். என்னை? |
| 'குற்றிகரங் குற்றுகர மென்றிரண்டு மாய்தமும் 29ஒற்று மெனவொரு நான்கொழித்துக் - கற்றோர் |
|
(24) இழைபு என்பது இசைப்பாட்டுக்கள். கலியும் பரிபாடலும் போன்றவையும் அபிநயத்துக்குப் பயன்படும் பாட்டுக்களும் ஆம். நிலம் - இசைப்பாட்டின் தானம். குறளடி முதல் கழிநெடிலடி யீறாக உள்ள ஐந்தடிகளுக்கு முரிய எழுத்துக்களின் எண்ணைக்கொண்டு கணக்கிடப்படுவது இது. நிலம் பதினேழு ஆவன : குறளடிக்கு 3-நிலம், சிந்தடிக்கு 3-நிலம், அளவடிக்கு 5-நிலம், நெடிலடிக்கு 3-நிலம். கழிநெடிலடிக்கு 3-நிலம், ஆக 17-நிலம். (25) செய்யுளியலுடையார் - தொல்காப்பியனார். நாற்சீர் கொண்ட அளவடி ஒன்றனையே எழுத்தெண்ணி அது குறளடி முதல் ஐந்தடிகளில் ஒன்று என்று கணக்கிடுவர் தொல்காப்பியனார். |
|
(பி - ம்.) 29. ஒற்றுமெனவோர்நான் ககற்றியே. |