| உயிரு முயிர்மெய்யு 30மோதினா ரெண்ணச் செயிர்தீர்த்த செய்யு ளடிக்கு' |
என்றார் ஆகலின். |
வரலாறு |
நேரிசை யாசிரியப்பா |
| (26) 'போந்து போந்து சார்ந்து சார்ந்து தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து வண்டு சூழ விண்டு வீங்கி நீர்வாய்க் கொண்டு நீண்ட நீலம் ஊர்வா யூதை வீச வீர்வாய் மதியேர் 31நுண்டோ டொல்கி மாலை நன்மணங் கமழும் பன்னெல் லூர அமையேர் மென்றோ ளாயரி நெடுங்கண் இணையீ ரோதி யேந்திள வனமுலை இறும்பமர் மலரிடை யெழுந்த மாவின் நறுந்தகை துயல்வரூஉஞ் செறிந்தேந் தல்குல் 32அணிநடை யசைஇய வரியமை சிலம்பின் மணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுதல் ஒளிநிலவு வயங்கிழை யுருவுடை மகளிரொடு நளிமுழவு முழங்கிய வணிநிலவு மணிநகர் இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை கலனளவு கலனளவு கலனளவு கலனளவு பெருமணம் புணர்ந்தனை யென்பவஃ தொருநீ மறைப்பி னொழிகுவ தன்றே.' |
எனக் கொள்க. |
(6) பொருள் |
இனிப் 'பொருள் கோள்' என்பது உம்மைத் தொகை, பொருளும் பொருள்கோளும் என. |
|
(26) குற்றியலிகரம் குற்றியலுகரம் ஒற்று ஆய்தம் இவற்றை ஒழித்து எழுத்தெண்ணி இவ்வாசிரியப்பாவின் அடிகளில் எவை குறளடி, எவை சிந்தடி, எவை அளவடி, எவை நேரடி, எவை கழி நெடிலடி என்று கணக்கிட்டுக் கொள்க என்றவாறு. |
|
(பி - ம்.) 30. மோதினார் கொள்ளச். 31. வண்டோ. 32. அணி நல னசைஇய அணிநகை. |