186

யாப்பருங்கலக் காரிகை

 
'அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் றினல்.'

(குறள், 254)
 

     இதனுள் அருளும் அருளல்லதும் என்றார் போலக் கொள்க.

     அவற்றுள் பொருளாவன : குறிஞ்சி, கைக்கிளை முதலிய (27) அகமும்
அகப்புறமும், வெட்சி, பாடாண்பாட்டு முதலிய புறமும், புறப்புறமும் என இவை. (28)
அவை அவ்விலக்கணங் கூறிய நூல்களுட் கண்டுகொள்க.
 

(7) பொருள்கோள்

     இனிப் பொருள் கோள் ஒன்பது வகைப்படும். அவை (1) நிரனிறை மொழிமாற்று,
(2) சுண்ண மொழி மாற்று, (3) அடிமறி மொழிமாற்று, (4) அடி மொழிமாற்று, (5)
பூட்டுவிற் பொருள் கோள், (6) புனலாற்றுப் பொருள் கோள், (7) அளை மறி பாப்புப்
பொருள் கோள், (8) தாப்பிசைப் பொருள் கோள், (9) கொண்டு கூட்டுப் பொருள்
கோள் என இவை.

      அவற்றுள், நிரனிறை இரண்டு வகைப்படும், பெயர் நிரனிறை யும் வினை
நிரனிறையும் என.

      அவற்றுள் பெயர் நிரனிறை வருமாறு :
 

இன்னிசை வெண்பா
 

  (29) 'கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி
மதிபவள முத்த முகம்வாய் முறுவல்
 

     (27) அகம் என்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும்
ஐந்திணையாம். அகப்புறமாவது : காந்தளும், வள்ளியும், சுரநடையும், முதுபாலையும்,
தாபதமும், தபுதாரமும், குற்றிசையும், குறுங்கலியும், பாசறை முல்லையும்,
இல்லாண்முல்லையும் என்றிவை பத்தும் கைக்கிளையும் பெருந்திணையும் ஆம்.
புறமாவது : வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி உழிஞை, நொச்சி, தும்பை என்னும்
ஏழாம். புறப்புறமாவது : வாகை, பாடாண், பொதுவியல் என்னும் மூன்றாம்.

      (28) சில பிரதிகளில் இங்கே, 'இவற்றின் விகற்ப மெல்லாம் பன்னிரு
படலத்துள்ளும் வெண்பா மாலையுள்ளும் கண்டு கொள்க' என்ற தொடர்
காணப்படுகிறது.

      (29) கொட்டை - வட்ட வடிவமாகச் செய்யப்படும் ஓரணை கொடி நுசுப்பு,
குவளை கண், கொட்டை மேனி' என்றும். 'மதி முகம் பவளம் வாய் முத்தம் முறுவல்'
என்றும், 'பிடிநடை, பிணை நோக்கு, மஞ்ஞை சாயல்' என்றும் கூட்டுக.