ஒழிபியல் 'பொருளோ டடிமுத' | 187 | | | பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல் வடிவினளே வஞ்சி மகள்' | எனக் கொள்க. இனி, வினை நிரனிறை வருமாறு : | நேரிசை வெண்பா | | (30) 'காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப பொதுசேர் தார்மார்ப போர்ச்செழிய - நீதியால் மண்ணமிர்த மங்கையர்தோள் மாற்றாரை யேற்றார்க்கு நுண்ணிய வாய பொருள்.' | எனவும், | இன்னிசை வெண்பா | | (31) ' அடல்வே லமர்நோக்கி நின்முகங் கண்டே உடலு மிரிந்தோடு 33மூழ்மலரும் பார்க்கும் கடலுங் கனையிருளு மாம்பலும் பாம்புந் தடமதிய மாமென்று தான்.' | எனவும் கொள்க. [இனி, முறை நிரனிறை, எதிர் நிரனிறை, மயக்க நிரனிறை என்று வேண்டுவாரு முளரெனக் கொள்க. அவை (32) வந்த வழிக் கண்டு கொள்க.] | | (30) கா - காப்பாற்று. து - உண். தாழ் - தாழ்த்து. ஆய் - ஆராய்ச்சி செய். காது சேர் தாழ் குழை ஆய் என்ற வினைகளை நிரலே மண் முதலியவற்றோடு கூட்டி 'மண்கா, அமிர்தம் து, தோள்சேர் மாற்றாரைத் தாழ், ஏற்றார்க்குக் குழை, பொருள் ஆய் என்று முடிக்க. (31) நோக்கி : விளி. உடலும் - பொங்கிவரும். ஊழ் - முறை. 'கடல் உடலும், இருள் இரிந்தோடும். ஆம்பல் மலரும், பாம்பு பார்க்கும்' எனக்கூட்டுக. (32) நன். சூ. 414, சங்கர. முதலியவற்றிற் காண்க. நிரனிறைப் பொருள் கோளை ஓர் அணியாகக் கொள்வர் தண்டியலங்கார ஆசிரியரும் மாறனலங்கார ஆசிரியரும். | | (பி - ம்.) 33. முண்மலரும். | |
|
|