இனி, (33) சுண்ண மொழிமாற்று வருமாறு : |
சிந்தியல் வெண்பா |
| 'சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை.' |
இதனுள், 'சுரை' என்பதனோடு 'மிதப்ப' என்பது பொருள் கொள்ளவும், 'அம்மி' என்பதனோடு 'ஆழ' என்பது பொருள் கொள்ளவும், 'யானை' என்பதனோடு 'நிலை' என்பது பொருள் கொள்ளவும், 'முயல்' என்பதனோடு 'நீத்து' என்பது பொருள் கொள்ளவும் வந்தமையால் சுண்ண மொழிமாற்று. இனி, அடி மறி மொழிமாற்று வருமாறு : |
அடிமறி மண்டில வாசிரியப்பா |
| 'சூரல் பம்பிய சிறுகா னியாறே சூரர மகளி ராரணங் கினரே வார லெனினே யானஞ் சுவனே சார னாட நீவர லாறே.' |
(கா. 28. மேற்) |
என்னும் பாட்டு வேண்டிற் றோரடி முதலாகச் சொன்னாலும் ஓசையும் பொருளுங் கொண்டு நிற்றலால் அடிமறி மொழி மாற்று. இனி, அடி மொழி மாற்று வருமாறு : |
குறள் வெண்பா |
| 'ஆலத்து மேல குவளை குளத்துள வாலி னெடிய குரங்கு.' |
இதனை 'ஆலத்து மேல வாலி னெடிய குரங்கு' எனவும், 'குவளை குளத்துள' எனவும் இரண்டடியின் மொழி மாற்றிப் பொருள் கொண்டமையால் அடி மொழி மாற்று. இதனை இரண்டடி மொழிமாற்று எனினும் அமையும். |
|
(33) ஓரடியிலுள்ள மொழிகளை மாற்றிப் பொருள் கொள்ள வழங்குவது சுண்ண மொழி மாற்று. |