ஒழிபியல் 'பொருளோ டடிமுத'

189

 
     இனி, பூட்டுவிற் பொருள்கோள் வருமாறு :

நேரிசை வெண்பா

'திறந்திடுமின் றீயவை பிற்காண்டு மாதர்
இறந்து படிற்பெரிதா மேதம் - உறந்தையர்கோன்
தண்ணார மார்பிற் றமிழர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு.'
 
     இதனுள் 'திறந்திடுமின்' என்பது கதவென்பதனோடு 34நோக்குடைமையிற் (34)
பூட்டுவிற் பொருள்கோளாயிற்று.

      இனி புனல் யாற்றுப் பொருள்கோள் வருமாறு :
 

இன்னிசை வெண்பா

'அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம்
விலைப்பாலிற் கொண்டூன் மிசைவதூஉங் குற்றம்
சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றம்
கொலைப்பாலுங் குற்றமே யாம்.'

(நான்மணிக். 28)
 

     இஃது அடிதோறும் பொருளற்று வந்தமையாற் (35) புனல் யாற்றுப்
பொருள்கோள்.

     இனி, அளைமறி பாப்புப் பொருள்கோள் வருமாறு :
 

ஆசிரிய விருத்தம்

  '(36) தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைந்து
தண்டூன்றித் தளர்வார் தாமுஞ்

சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியிற்
சுழல்வார் தாமும்

மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்று
35முனிவார் தாமும்
 

     (34) பூட்டுவிற் பொருள்கோளை ஓர் அணியாகக் கொள்வர் மாறனலங்கார
முடையார்

      (35) யாற்று நீர்ப் பொருள்கோள், யாற்று வரவுப் பொருள்கோள்,
ஆற்றொழுக்குப் பொருள்கோள் எனவும் இது கூறப்படும்.

      (36) நாற்கதி : தேவகதி, மக்கட்கதி, விலங்குகதி, நரககதி, மூழ்ந்த -
பற்றிக்கொண்ட. அளை - புற்று.
 

     (பி - ம்.) 34. பொருள்கொண்டமையாற். 35. முயல்வார்.