| 'ஒற்றிற்கு மாத்திரை யொன்றே யளபெழுந்தாற் றெற்றக் குறியதுவே யாம்' '(24) உன்னல் காலே யூன்ற லரையே முறுக்கன் முக்கால் விடுத்த லொன்றே' |
என்றார் ஆகலின். |
(4) |
--- |
அசை |
| 5. குறிலே நெடிலே குறிலிணை யேனைக் குறினெடிலே நெறியே வரினு நிரைந்தொற் றடுப்பினு நேர்நிரையென் றறிவேய் புரையுமென் றோளி யுதாரண மாழிவெள்வேல் வெறியே சுறாநிறம் விண்டோய் விளாமென்று வேண்டுவரே. |
இ - கை. (1) நிரனிறைப் பொருள்கோள் வகையான் (2) நேரசையும் நிரையசையும் ஆமாறும் அவற்றுக்கு உதாரணம் ஆமாறும் உணர்த்....று. |
'குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறினெடிலே நெறியே வரினும் நிரைந்து ஒற்று அடுப்பினும் நேர்நிரை என்று அறி' எ - து. குற்றெழுத்துத் தனியே வரினும், நெட்டெழுத்துத் தனியே வரினும், குற்றெழுத்து ஒற்றடுத்து வரினும், நெட்டெழுத்து ஒற்றடுத்து வரினும், நேரசையாம் எ-று. |
குறில் இணைந்து வரினும், குறினெடில் இணைந்து வரினும், குறில் இணைந்து ஒற்றடுத்து வரினும், குறினெடில் இணைந்து ஒற்றடுத்து வரினும் நிரையசையாம் எ-று. |
|
(24) இதன்பின் சில சுவடிகளில் 'அரைநொடி யென்ப தியாதென வினவின், நொடிதரக் கூடிய விருவிர லளவே' என்ற சூத்திரம் காணப்படுகிறது. (1) நிரனிறைப் பொருள்கோள் - பெயரும் வினையுமாகிய சொற்களையும் அவை கொள்ளும் பெயரும் வினையுமாகிய பயனிலைகளையும் வேறு வேறு நிரையாக (வரிசையாக) நிறுத்தி முறையானே இதற்கு இது பயனிலை என்பது தோன்றக் கூறுவதாம்; நன். சூ. 414. (2) செய்யுளுக்கு எழுத்தெண்ணுங்கால் மெய்கள் தள்ளுண்டுபோம். அங்ஙனம் கணக்கிட்டு நேரசையைத் தனியசை என்றும் நிரையசையை இணையசை என்றும் காக்கை பாடினியார் முதலியோர் வழங்குவர். இந்நூலாசிரியரும் யாப்பருங்கலத்தில் இப்பெயர்களை ஆளுவர் ; யா. வி. சூ. 7, 9. |